மனிதனின் சிந்தனைக்கு
மனிதனின் சிந்தனைக்கு ********************* மரணம் என்ற ஒரு சொல் ஒரு மனிதனின் சகாப்தத்தை முடித்து விடுகிறது உலகம் அஞ்சும் அதிகாரியாக உலகம் போற்றும் அறிவாளியாக உலகம் காண துடிக்கும் முகமாக உலகம் தூற்றும் தீயவனாக இருப்பினும் அவனது நினைவுகள் குறுகிய நாளில் மங்கி விடும் அல்லது மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு விடும் அல்லது திரிக்கப்பட்டு விடும் உற்றார் உறவினர்களும் என்றோ ஒரு நாள் நினைவு கூறும் வரிசையில் நிறுத்தப்பட்டு விடும் எவருடைய இழப்பிற்கும் மரணத்திற்கும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு நொடியும் நின்றதும் இல்லை தடுமாறியது இல்லை காரணம் பிரபஞ்சம் வாழ்பவனுக்கு உரித்தானது மரித்தவனுக்கு மாயமானது உயிர் எங்கிருந்து வந்தது எந்த நிமிடம் உடலில் நுழைந்தது எந்த நிமிடம் உடலை விட்டுபிரிந்தது எந்த முறையில் பிரிந்தது என்பதை துல்லியமாக கண்டறியும் ஞானம் எவருக்கும் இல்லை பிரபஞ்சத்தை உருவாக்கியவனே உயிர்களை செதுக்கியவன்...