அவ்லியா தொடர் ஆறு
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** பாகம் ஆறு . கட்டுரை எண் 1546 ***************** இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழியை முழு மனதுடன் வாழ்வில் யார் இயன்றவரை நடைமுறை படுத்துகிறார்களே அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் மகான்கள் என்பதை பாமரன் புரிந்து கொள்ளும் விதம் அல்லாஹ் (ஜல்) குர்ஆனில் குறிப்பிடுகிறான் قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (நபியே!) நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 3:31) இறைத்தூதரின் வழியை தூதரின் குடும்பத்தவர்கள் மட்டுமே முழுமையாக...