அவ்லியா தொடர் ஐந்து
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** பாகம் ஐந்து . கட்டுரை எண் 1545 ***************** ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது போல் ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால் தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும் கணவாய் இப்ராஹீம்ஷா தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால் தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித...