Posts

Showing posts with the label அவ்லியா

அவ்லியா தொடர் ஆறு

  மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஆறு .  கட்டுரை எண் 1546                     ***************** இறைத்தூதர் (ஸல்)  அவர்கள் காட்டிய வழியை முழு மனதுடன் வாழ்வில் யார் இயன்றவரை நடைமுறை படுத்துகிறார்களே  அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் மகான்கள் என்பதை பாமரன் புரிந்து கொள்ளும் விதம் அல்லாஹ் (ஜல்) குர்ஆனில் குறிப்பிடுகிறான்  قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ (நபியே!) நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 3:31) இறைத்தூதரின் வழியை தூதரின் குடும்பத்தவர்கள் மட்டுமே முழுமையாக...

அவ்லியா தொடர் ஐந்து

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஐந்து .  கட்டுரை எண் 1545                     ***************** ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது  போல்  ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால்  தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது  சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும்  கணவாய் இப்ராஹீம்ஷா  தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது  வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்  இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால்  தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித...

அவ்லியா தொடர் பாகம் நான்கு

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் நான்கு.  கட்டுரை எண் 1544                     ***************** இறை வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் வாழ்நாளில் இயன்றவரை கடைபிடிப்பவர்களே  மகான்கள் மனிதன் என்ற முறையில் இயல்பாக ஏற்படும் தவறுகளில் இருந்தும் கூட அதிகமான முன்னெச்சரிக்கையை பின்பற்றுபவர்களே மகான்கள்  அத்தகையவர்கள் பெயரால் தர்ஹாக்களை உருவாக்கி வைத்து கொண்டு அவர்களின் சன்னதியில் தர்ஹா வியாபாரிகள் அரங்கேற்றம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களையும் இஸ்லாத்துடன் உரசினால் மகான்களை உண்மையில் இழிவுபடுத்தி  மட்டப்படுத்தக்கூடியவர்கள்  தர்ஹா நிர்வாகிகளும் மகான்களின்  துதி பாடுவதையே இஸ்லாமாக கருதும்  கூட்டத்தவர்களுமே ஆவர் செய்திகளை வாசிக்கும் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் யாவும் தர்ஹா பக்தர்கள் என்றும் தர்ஹா வழிபாடு துவங்கியது என்றும் அறிக்கை வாசிக...

அவ்லியா தொடர் பாகம் மூன்று

      மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் மூன்று.  கட்டுரை எண் 1543                     ***************** மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம்  என்ற நிலையில் மனிதனை அடக்கம் செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை  நல்லடியார்கள் என்ற காரணத்தால் ஒரு மனிதனின் மண்ணறையை சுற்றி கட்டடம் எழுப்பலாம்   அல்லது தர்ஹா  எழுப்பலாம் என்றால்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களில் எவரும்  நல்லடியார்கள் வரிசையில்  இடம் பெற மாட்டார்களா   ? தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களிடம்  கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் குற்றமாக பார்க்கப்படுமா? தர்ஹாக்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஆத...

அவ்லியா தொடர் பாகம் ஒன்று

                           அவ்லியா  தவறான புரிதல்களும் தெளிவான       புரிதல்களும் பாகம் ஒன்று             ****************************** அவ்லியா  என்ற அரபு பதத்திற்கு  நேசர்கள் என்ற பன்மை பொருள்  வலி என்ற பதத்திற்கு  நேசர் என்ற  ஒருமை பொருள்  அவ்லியா அல்லாஹ் என்றால்  அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்  اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ (விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள் (அல்குர்ஆன் : 10:62) அவ்லியா  ஷைத்தான் என்றால் சாத்தானின் நேசர்கள் என்று பொருள் اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌  وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ  فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏ நம்பிக்கை க...

அப்துல் காதிர் ஜைலானி( ரஹ்)

     இமாம் அப்துல் காதிர் ஜைலானி        (  ரஹ்) அவர்களை மதிப்போம்                     •••••••••••••••••                   கட்டுரை எண் 1146               J . யாஸீன் இம்தாதி                     ************       ரபியுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டதா  வாருங்கள் முஸ்லிம்களே  மகான் அப்துல்காதிர் ஜைலானி  (ரஹ்) அவர்களின் பெயரில் பள்ளிவாசல்களில் மவ்லித் பாடல்களை  படிப்போம் குத்பிய்யத்  ராகமாக  படித்து நன்மைகளை குவிப்போம்  மகான்களை மதிப்போம் வஹ்ஹாபிகளை புறக்கணிப்போம் இதுவே சில மார்க்க வேடதாரிகளின் வழமையான  வாசகம்  இதை தாண்டி  அப்துல் காதிர் ஜைலானி ( ரஹ் ) அவர்களின் உண்மையான வரலாற்றை மக்கள் புரிகின்ற மொழியில் சபைகளில்  விளக்கி பேசியிருக்கிறார்களா  ? அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள்  இஸ்லாமிய வளர்ச்சி...