காதல் திருமணம் கசப்பது ஏன்
காதல் திருமணம் விரைவில் கசப்பது ஏன் *********************************** கட்டுரை எண் 1530 ************ குடும்பத்தார் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணமாக இருப்பினும் சரி காதல் திருமணமாக இருப்பினும் சரி ஆண் பெண் உடலியல் உளவியல் கூறுகளை முறையாக அறியாதவர்கள் வாழ்வில் பிணக்குகள் பிரிவுகள் ஏற்படுவது சகஜம் ஆனாலும் நடைமுறையில் காதலித்து திருமணம் செய்தவர்களே குறுகிய காலத்தில் விவாகரத்தை கோரி நீதிமன்றங்களிலும் சமூக அமைப்புகளிலும் முறையிடுகின்றனர் என்பதே அன்றாடம் அறிந்து வரும் நடைமுறை செய்திகளாகும் உச்ச நீதிமன்றமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை இளையபருவத்தில் இருக்கும் ஆண் பெண் இருசாராரும் உணருவது காலத்தின் கட்டாயமாக மாறிவுள்ளது (முதல் காரணம்) குடும்பத்தார்கள் முடிவு செய்...