பதவியை விரும்பாதே
பதவி மோகத்தை புறம் தள்ளுவீர் ************************* பதவிகளை பெறும் எண்ணம் கடுகளவு இருந்தாலும் அந்த எண்ணம் பாவங்களை செய்யவே தூண்டும் தன்னை தானாக தேடி வரும் பதவியை கூட விரும்புவது முஸ்லிமின் பண்பு அல்ல இறையில்லத்தின் சாவி உன் வசம் வந்தாலும் கூட வாழ்நாள் முழுவதும் நீ அதற்காக எச்சரிக்கை பேணும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறாய் என்பதை கவனித்துக்கொள் இப்பதவி இருந்தால் அதை சாதிக்கலாம் இதை சாதிக்கலாம் என்று உன்னை சுற்றியிருப்போர் உனது ஆசையை தூண்டலாம் மூளைச்சலவை செய்யலாம் ஆனால் இஸ்லாம் அவ்வாறு சொல்லவில்லை நற்பணிகளை செய்வதற்கு பதவியும் அதிகாரமும் அத்தியாவசியம் இல்லை மக்களே உன்னை பதவியில் அமர வைத்தால் அதில் இறைவனின் பேருதவி என்றும் இருக்கும் பதவியை பெறுவதற்காகவே நீயே முயற்சி செய்தால் அதில் இறைவனின் பேருதவி நிச்சயம் தூரம் இருக்கும் பதவிக்கு பேராசைப்படுவதால் ஏற்படும் சச்சரவுகளை பிளவுகளை குரோதங்களை அரசியலில் மட்டும் அ...