தொழுகையாளியும் பாவியாகிறான்
தொழுகையாளியும் பாவியாகிறான் ♦♦♦♦♦♦♦♦♦ J . YASEEN IMTHADHI கட்டுரை எண் 1427 21-11-2021 ******* தொழுகையின் மூலம் நன்மைகளை ஈட்டி அதை பித்னாக்களின் மூலம் உடனடியாக அழிக்கும் பாவிகளாக பலர் இருப்பதை பரவலாக காண முடிகிறது உழைப்பின் பலனை குப்பையில் வீசுபவனும் தொழுகையின் பலனை பித்னா மூலம் அழித்து கொள்பவனும் அறிவிலியே சாத்தான் இருக்கின்றான் என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவை இல்லை மதுபானத்தை குடிக்க வைத்து மனிதனை பாவத்தில் வீழ்த்தவும் சாத்தானுக்கு தெரியும் மதிப்புள்ள தேன் பானத்தை கழிவறையில் ஊற்ற வைத்து அதை கண்டு ஏளனமாக சிரிக்கவும் ரசிக்கவும் சாத்தானுக்கு தெரியும் நாவுகள் மூலம் வெளிப்படும் சொற்களும் வார...