நல்லெண்ணம் கொள்வதும் நல்லறம்
நல்லெண்ணம் கொள்வதும்
நல்லறமே
[][][][][][][][][][][][][][][][][]
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
கட்டுரை எண் 1314
********
நம் வாழ்நாளில் கடந்த காலங்களில் சமுதாய முன்னேற்றத்திற்கு நாம் எந்தளவு பங்களிப்பை செய்துள்ளோம் என்பது தான் நம்மை மாற்று நன்மைகளின் பக்கம் இழுத்து செல்லும்
மாறாக அவர்கள் என்ன செய்தார்கள் ?
இந்த இயக்கம் என்ன செய்தது ?
அந்த தலைவர் என்ன செய்தார் ?
இவர் செய்தது எதற்காக ?
அவர்கள் செய்வது எதற்காக ?
என்று வீண் ஆய்வு வெற்று விவாதம் செய்து செய்து கொண்டிருந்தால் நாம் தான் வீணான விசயங்களுக்காக நம் நேரத்தை வீணடிக்கிறோம் என்பது பொருள்
தனி மனிதனோ அல்லது இயக்கமோ அவர்களின் மனோநிலைக்கும் சக்திக்கும் ஏற்று நல்லவற்றை தான் செய்து வருகிறார்கள் என்று நல்ல எண்ணங்களை நமக்குள் நாமே விதைத்து கொள்வதும் வளர்த்தி கொள்வது தான் நம் மறுமை வாழ்வுக்கு தேவையான முயற்சிகளை நம்மை செய்ய வைக்கும்
மனதில் நன்மையை நாடுவதும் வரவேற்பதும் நன்மை தான் என்பதை உட்கொள்வோம்
மற்றவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குவதின் மூலம் சகோதர வாஞ்சைகளை வளர்த்தி கொள்ள முயற்சி செய்யுங்கள் என்ற நபிமொழியை கூட நடைமுறை படுத்தாது பிறர்களை இழிவு படுத்தி இனிமை காணுவதில் தான் நம் வாழ்வு கழிகிறது
عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: كَانَ رَسُوْلَ الله ﷺ يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيْبُ عَلَيْهَا
387.நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது
மேலும் அதற்குப் பதிலாக (அதே சமயம் அல்லது வேறோரு சமயத்தில்) தாமும் ஏதேனும் கொடுக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment