ஆலிம்களின் சமூக நிலை
ஆலீம்சா ஆனாவே இப்படி
தான் சொல்லுவாங்கப்பா
><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><
12-02-2017
கட்டுரை எண் 1069
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
நம் கண்களால் நாம் பிறரை பார்க்கிறோம் ஆனால் பிறர்களின் பல கண்கள் நம்மை நோக்குகின்றது என்பதற்க்கு ஆலீம்களை பற்றிய பலதரபட்ட விமர்சனங்களே முக்கிய சான்றாக உள்ளது
மார்க்கத்தை கற்றோர்களுக்கு எந்தளவு சிறப்பு அமைந்துள்ளதோ அதை விட பல மடங்கு அவர்களுக்கு மறுமையில் கேள்விகளும் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது
நம் சமூகத்தில் நூற்றுக்கணக்கான பித்அத்துகள் நுழைந்ததற்க்கும் ஆலிம்கள் காரணம்
அதே நேரம் அந்த பித்அத்துகளை பித்அத் என்று மக்களுக்கு விளக்கி சொல்லி அதன் மூலம் இன்னல்களை தூற்றல்களை பெறுவதும் ஆலிம்களே
தற்போது இஸ்லாமிய எழுச்சி மிகைத்து வருவதற்க்கும் ஆலிம்களின் பங்கே அதிக காரணம் என்ற உண்மையை மனமுரண்டாக மறுக்க கூடாது
ஆலிம்கள் அதிகமாக மார்க்க உணர்வோடு திகழ வேண்டும் என்பது நூறு சதவிகிதம் உண்மை அதே நேரம் ஹலால் ஹராம் இதர இஸ்லாமிய சட்டங்கள் ஆலீம்களுக்கும் மற்றோர்களுக்கும் ஒரே நிலை என்பதை மறந்து விட கூடாது
மார்க்கத்தை முறையாக கற்று கொடுப்பது ஆலிம்களின் மீது கடமை என்பதை போலவே மக்களும் தான் கற்ற கல்வியை பிறர்களுக்கு முறையாக எத்தி வைப்பது கடமை என்பதை மறந்து விட கூடாது
*****************************
1-என்னப்பா அப்துல்காதரு
நம்ம ஊருல புதுசா ஒரு ஆலீம் வந்திருக்காரே
அவர் யாரிடமும் பேச மாட்டார் போலே ?
நாளு நபர்களிடம் பேசனா தானே நாளு பேர் பள்ளிக்கு வருவாங்க இந்த நாலேஜ் கூட தெரியாத இமாமா இருக்காருப்பா அவரு
2-என்னப்பா ராவுத்தர்
இமாம்னா இமாம் மாறி இருக்க வேணாமா ?
யாரை பார்த்தாலும் நம்ம இமாம் அரட்டை அடிச்சுகிட்டே இருக்காரே
3-என்னப்பா பீர் முஹம்மத்
நம்ம இமாம் பேப்பர் செய்தியோ அல்லது டீவி செய்தியவோ பார்க்கவே மாட்டார் போலே ?
எப்ப பார்த்தாலும் தொழுகை நோன்பு மறுமைன்னே பேசீட்டு இருக்காரு காலத்துக்கு தகுந்த மாறி பேச வேணாமா ?
4-ஏம்பா ராவுத்தரு
நம்ம இமாம் இமாமுக்கு படிச்சாரா இல்லை வேற ஏதாவது படிச்சாரா ?
எப்ப பேசினாலும் உலகத்தை தொட்டு பேசாமே போகவே மாட்டேன்குறாரே தக்வாவை எப்பவுமே சொல்லனுமா இல்லையா ?
5- ஏன் தொப்பியும் வெள்ளை அங்கியும் போட்டாதான் இமாமா? நம்மலை போலே டிரஸ் போட்டா இமாம் இல்லேன்னு ஆயிருமா !
6-அட ச்சே இவர் இமாமா ?
இல்லே வேற ஏதாவதுமா ?
ஒரே மாடல் மாடலா டிரஸ் போட்டே சுத்துறாரே
7-இமாம்களை குறை சொல்லியும் பலன் இல்லை
ஏனா என்னதான் இமாமா இருந்தாலும் அவரும் மனிதர் தானே? சின்ன சின்ன விசயத்தை எல்லாம் பெருசாக்க கூடாது மாப்பிள்ளை புரியுதா ?
8- கொஞ்சமாவது சிந்திச்சு பாரு பாரூகு
நம்மளுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் வேணாமா?
இமாம்னா அதுக்குன்னு சில தகுதிகள் இருக்கா இல்லையா ?
இவங்களெல்லாம் என்னத்தை அரபு பாடசாலைகளில் படிச்சாங்களோ யா அல்லாஹ் !
9-நீ ஆயிரம் சொல்லு !
நம்ம சமூகம் சீர் கெட்டு போனதுக்கே இந்த இமாம்கள் தான் காரணம் இதை உனக்கு மறுக்க முடியுமாடா வெண்ணை 😃
10- என்னதா இருந்தாலும் இன்னைக்கு நம்ம சமூகத்துல கொஞ்சமாவது இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டதற்க்கே சில இமாம்கள் தான் காரணம் !! அதை எல்லாம் நாம மறுக்க கூடாது விளங்குதா புரியுதா ?
இப்ப புரியுதா உலகம்னா என்னான்னு ?
நின்னாலும் குத்தம் படுத்தாலும் குத்தம் சிரிச்சாலும் குத்தம் அழுதாலும் குத்தம் 😜😭
இரு கைகள் தட்டாது ஓசைகள் எழாது இஸ்லாமிய சமூகத்தில் பொதுமக்கள் ஒரு கை என்றால் இமாம்கள் ஒரு கை
முஸ்லிம் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்க்கு அனைத்து முஸ்லிம்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்தாலே இஸ்லாமிய எழுச்சி சாத்தியம் என்பதை மறவாதீர்
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ قَالَ: ذُكِرَ لِرَسُولِ اللهِ ﷺ رَجُلاَنِ أَحَدُهُمَا: عَابِدٌ وَاْلآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللهِﷺ: فَضْلُ الْعَالِمِ عَلَي الْعَابِدِ كَفَضْلِي عَلَي أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلُ السَّموَاتِ وَاْلاَرْضِينَ حَتَّي النَّمْلَةَ فيِ جُحْرِهَا وَحَتَّي الْحُوتَ لَيُصَلُّونَ عَلَي مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ
ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
கல்வி கற்ற ஓர் ஆலிம், வணக்கசாலியான ஓர் ஆபித் ஆகிய இரு மனிதர்களைப் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்ட போது, ஆபிதைவிட ஆலிமுக்குள்ள சிறப்பு, உங்களில் சாதாரண மனிதரைவிட எனக்குள்ள சிறப்பைப் போன்றாகும்
மேலும், மக்களுக்கு நன்மையானவற்றைக் கற்பிப்பவர் மீது, அல்லாஹ், அவனது மலக்குகள், வானம் பூமியிலுள்ள சகல படைப்புகள், புற்றுகளிலுள்ள எறும்புகள், மீன்களும் கூட (நீரில் தத்தமது முறைப்படி) ரஹ்மத்தைப் பொழியுமாறு துஆச் செய்கின்றன'' என்று கூறினார்கள்
நூல் திர்மிதி
عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَقُوْلَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: أَلاَ إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَّا فِيهَا إِلاَّ ذِكْرُ اللهِ وَمَا وَالاَهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ
கவனமாகக் கேளுங்கள்
உலகமும், உலகத்திலுள்ளவை யாவும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை (அருளை) விட்டும் தூரமாக்கப் பட்டவை, ஆயினும் அல்லாஹ்வுடைய திக்ரு அவனை நெருங்க உதவியாக இருப்பவை ஆலிம், அல்லது இல்மை கற்றுக் கொள்ளும் மாணவரைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ فَإِنِّي امْرُؤٌ مَقْبُوضٌ وَإِنَّ الْعِلْمَ سَيُقْبَضُ حَتَّي يَخْتَلِفَ الرَّجُلاَنِ فِي الْفَرِيضَةِ لاَ يَجِدَانِ مَنْ يُّخْبِرُهُمَا بِهَا
குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள், வாரிசுரிமைச் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், அதை மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனேனில், என் உயிர் கைப்பற்றப்படும். மார்க்க அறிவு மிகக் குறைந்து விடும் மார்க்க கல்வியும் விரைவில் உயர்த்தப்பட்டுவிடும்
ஒரு பர்ளான சட்டம் பற்றி இருவர் தர்க்கித்துக் கொள்வர், அந்தச் சட்டத்தின் சரியான விளக்கத்தைத் தருவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் பைஹகீ
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment