விடியலை தேடி விரக்தியில் மனித சமூகம்
விடியலை தேடி விரக்தியில் தத்தளிக்கும் தலைவர்கள் ******************* எதற்காக போராட வேண்டும் என்று இன்றும் நாட்டு மக்களை அழைக்கிறார்களோ எந்த போராட்டங்களை முன்னெடுத்து சாதித்தவர் என்று சில தலைவர்களை முன்னுதாரணம் காட்டுகிறார்களோ அவர்கள் பெற்றுத்தர துடிக்கும் பல உரிமைகளை சுதந்திரங்களை 1446 ஆண்டுகளுக்கு முன்பே எளிதாக பெற்றுத்தந்து சாதனை நிகழ்த்தி காட்டியவர் அண்ணல் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அம்பேத்கர் பெரியார் சேகுவாரா போன்றவர்களை முன்னுதாரணம் காட்டுபவர்கள் அவர்கள் மக்களை திரட்டி எதற்கு போராடினார்களோ அந்த உரிமைகளை சுயமரியாதை உணர்வை கடந்த பதினான்கு நூற்றாண்டுகள் முதல் இன்று வரை நடைமுறையில் வெளிப்படுத்தி காட்டுவது முஸ்லிம் சமுதாயமே மொழி இன உணர்வை தாண்டியதே மனிதநேயம் என்பதை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே நடைமுறை படுத்த இயலும் என்பதற்கும் நபிகள் நாயகத்தின் வரலாறு எடுத்துக்காட்டாக திகழ்கிறது படைப்பா...