Posts

Showing posts from March, 2026

ஏகத்துவ பிரச்சாரத்தின் பயன்கள்

       ஏகத்துவ பிரச்சாரத்தால்    முளைத்த சமுதாய பயன்கள்                     *******************               கட்டுரை எண் 1570                       ***************           சமீபத்தில் ஆலீம் பட்டம் பெற்று அழைப்புப்பணியில் ஈடுபடும்  சில இளைய உலமாக்கள்  எதிர் கொள்கையில் பயணிக்கும் ஏகத்துவ சிந்தனை  உடையவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக விமர்சிக்கும்  அவலத்தை பார்க்க முடிகிறது  இதற்கு அடிப்படைக்காரணம்  அவர்கள் பிறப்பதற்கு முன் தமிழகத்தில் நிலவி வந்த  முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகளையும்  நடைமுறைகளையும்  கண்கூடாக காணவில்லை  மூடநம்பிக்கைகளும்  சிர்க் என்ற பெரும்பாவங்களையே  இஸ்லாமாக கருதி வந்தனர்  வயதானவர்களுக்கே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது என்ற மனநிலையில்  அநேகர் வாழ்ந்து வந்தனர்  கூத்தாடிகளுக்கு மன்றங்களையும் அரசியல்வாதிகள...

ஈரான் போர்

      அடிப்படை  கொள்கை வேறு             ஆதரவளிப்பது வேறு                   **********************       எக்கருத்துக்கும் குர்ஆன் சுன்னாவை முன்னுதாரணம் காட்டி அதை வலுப்படுத்துவதற்கு அறிஞர்களின் கருத்துக்களை புறச்சான்றாக வைத்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்து வந்த  சில அறிஞர்கள்  தற்போதைய ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் சூழலில்  ஷியாக்களைப்பற்றி  ஷியா கொள்கையை எதிர்க்கும் இமாம்களின் கருத்துக்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கருத்துக்களையே  குர்ஆன் சுன்னாவின் நேரடி  கட்டளைகளை போல் சித்தரித்து பாமரமக்களிடம்  பரப்பும் பதிவுகளை சமூகவலைத்தளத்தில் காண முடிகிறது   போர் பற்றிய கருத்துப்பதிவுகளில் ஷியாக்களின் தவறான கொள்கையை  இச்சூழலில்  சரி காணுவதை  போல் திசை திருப்பி தேவையற்ற வெறுப்பை மக்கள் மன்றத்தில் திணித்து வருகின்றனர்  உலகில் போர் ஏற்படுவது என்பது எதார்த்தமான விசயம்  எந்த நாடு போரில் ஈடுபட்டாலும்...