ஈரான் போர்
அடிப்படை கொள்கை வேறு
ஆதரவளிப்பது வேறு
**********************
எக்கருத்துக்கும் குர்ஆன் சுன்னாவை முன்னுதாரணம் காட்டி அதை வலுப்படுத்துவதற்கு அறிஞர்களின் கருத்துக்களை புறச்சான்றாக வைத்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்து வந்த
சில அறிஞர்கள்
தற்போதைய ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் சூழலில் ஷியாக்களைப்பற்றி
ஷியா கொள்கையை எதிர்க்கும் இமாம்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கருத்துக்களையே
குர்ஆன் சுன்னாவின் நேரடி கட்டளைகளை போல் சித்தரித்து பாமரமக்களிடம் பரப்பும் பதிவுகளை சமூகவலைத்தளத்தில் காண முடிகிறது
போர் பற்றிய கருத்துப்பதிவுகளில் ஷியாக்களின் தவறான கொள்கையை இச்சூழலில்
சரி காணுவதை போல் திசை திருப்பி தேவையற்ற வெறுப்பை மக்கள் மன்றத்தில் திணித்து வருகின்றனர்
உலகில் போர் ஏற்படுவது என்பது எதார்த்தமான விசயம்
எந்த நாடு போரில் ஈடுபட்டாலும்
மதம் மற்றும் இனம் தாண்டி போரில் ஈடுபடும்
இரு தரப்பில்
யார் பக்கம் போர் விசயத்தில் நியாயம் உள்ளது ? என்று மக்கள் கருத்து பரிமாறுவது இயல்பான ஒன்று
பொதுத்தளத்தில் எடுத்து வைக்கப்படும் போர்
பற்றிய நியாயம் அநியாயங்களுக்கு விளக்கமோ மறுப்போ மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கலாமே தவிர
போரில் ஈடுபடுபவர்களின் கொள்கை சரியா ?
அவர்கள் கடந்த நாட்களில் செய்த அநியாயங்கள் என்ன என்று பட்டியல் போடுவது மக்களின் நியாயமான உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாகும்
அந்த வகையில் தான்
தற்போதைய ஈரான் அமெரிக்க இஸ்ரேல் போர் விசயத்தில் மக்கள் கருத்துக்களை பரிமாறுகிறார்களே தவிர
போரில் ஈடுபடுவோரின் தவறான கொள்கையை
தவறான முன்நடவடிக்கைகளை
எவரும் சரி கண்டிருக்கவில்லை
அனைத்து தரப்பிலும் சில அறிவீனர்கள் எக்காலத்திலும் இருக்கவே செய்வார்கள்
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
சிலர்கள் படுகொலை செய்யப்பட்ட ஈரான் குமைனியை நபியின் வாரிசு போல் சித்தரிப்பார்கள்
சிலர்கள் குமைனியை ஷைத்தானின்
நேரடி வாரிசாகவும் சித்தரிப்பார்கள்
இது அவர்களின் மார்க்க அறிவீனமும்
பொது ஞானக்குறைபாடுமே தவிர சூழலுக்கு ஏற்ற சிந்தனை கருத்துக்கள் அல்ல
2026 ஆண்டில் நடைபெறும்
ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் போரில் யாரின் பக்கம் நியாயம் உள்ளது ?
யார் வரம்பு மீறியது ?
யார் போரை துவங்கியது ?
எதற்காக போரை துவங்கியது?
இது மட்டுமே தற்போதைய அடிப்படை கேள்விகளாகும்
இதில் ஈரான் பக்கம் நியாயம் இருப்பின் நியாயம் என்று சொல்லுங்கள்
அல்லது ஈரான் பக்கம் அநீதம் இருப்பின்
அநீதம் என்று சொல்லுங்கள்
அதற்கு பெயரே கருத்துப்பரிமாற்றம்
இதை மார்க்க அழைப்பாளர்களே உணரவில்லை எனில் பாமரர்கள் எவ்வாறு உணர்ந்து செயல்படுவார்கள் ?
குறிப்பாக இவ்விசயத்தில் மாற்று கருத்து தெரிவிப்போரை கொள்கையை விட்டு
தடம் புரண்டவர்கள் என்றும்
இமாம்களை அவமதிப்பவர்கள் என்றும் இயக்கங்களுக்கு கட்டுப்படாதவர்கள் என்றும் தந்திரமாக திசை திருப்பி மக்களிடத்தில் இருந்து பிரிக்கும் கீழ்த்தரமான குணத்தை கைவிடுங்கள்
குர்ஆன் சுன்னாவை எந்தளவுக்கு மதிக்க வேண்டும்
அறிஞர்களின் கூற்றுக்களை எந்தளவுக்கு
மதிக்க வேண்டும்
இறைவன் வழங்கிய பகுத்தறிவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்
என்ற வேறுபாடுகளை தெளிவாக அறிந்து வைத்தே கொள்கையில் பயணிக்கிறோம்
இன்ஷா அல்லாஹ் இனியும் பயணிப்போம்
எதற்கும் இஸ்லாம் எல்லையை வகுத்துள்ளது
அந்த எல்லையை தாண்டி சிந்திப்பதும் குற்றம்
அந்த எல்லைக்குள் சுயமாக சிந்திக்கக்கூடாது என்று சுய விதிகளை திணிப்பதும் குற்றம்
ஒரு பாவியிடமிருந்து ஒரு தகவல் வந்தாலும் அதன் நியாயம் அறிந்து செயல்படவும்
ஆதரவு தரவும் இஸ்லாம் தடுக்கவில்லை
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
முஃமின்களே!
ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்
அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்
(இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்
(அல்குர்ஆன் : 49:6)
குழப்பமான சூழல் என்ற நிலை இருந்தால் அச்சூழலில் கருத்து சொல்லாமல் ஒதுங்கி அமைதியாக இருப்பதுவே முஸ்லிமின்
தனிப்பட்ட முடிவாகும்
تَكُونُ فِتَنٌ، القَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ القَائِمِ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي...
ஒரு காலத்தில் பித்னாக்கள் ஏற்படும்
அப்போது உட்கார்ந்திருப்பவன் நிற்பவனைவிட சிறந்தவன்
நிற்கிறவன் நடப்பவனைவிட சிறந்தவன்
நடப்பவன் ஓடுபவனைவிட சிறந்தவன
புகாரி ஹதீஸ் எண் : 3601, 7081
முஸ்லிம் ஹதீஸ் எண் : 2886
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
5-3-2026
Comments
Post a Comment