அவ்லியா தொடர் பாகம் மூன்று
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** பாகம் மூன்று. கட்டுரை எண் 1543 ***************** மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் என்ற நிலையில் மனிதனை அடக்கம் செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை நல்லடியார்கள் என்ற காரணத்தால் ஒரு மனிதனின் மண்ணறையை சுற்றி கட்டடம் எழுப்பலாம் அல்லது தர்ஹா எழுப்பலாம் என்றால் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களில் எவரும் நல்லடியார்கள் வரிசையில் இடம் பெற மாட்டார்களா ? தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் குற்றமாக பார்க்கப்படுமா? தர்ஹாக்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஆத...