அவ்லியா தொடர் பாகம் மூன்று
மகான்களை மட்டப்படுத்தும்
ஞானசூனியங்கள்
*****************************
பாகம் மூன்று. கட்டுரை எண் 1543
*****************
மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம்
என்ற நிலையில் மனிதனை அடக்கம் செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை
நல்லடியார்கள் என்ற காரணத்தால் ஒரு மனிதனின் மண்ணறையை சுற்றி கட்டடம் எழுப்பலாம்
அல்லது தர்ஹா எழுப்பலாம் என்றால்
பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களில் எவரும் நல்லடியார்கள் வரிசையில்
இடம் பெற மாட்டார்களா ?
தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல்
பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் குற்றமாக பார்க்கப்படுமா?
தர்ஹாக்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் நபர்களும் கூட
பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் அவர்களின் தேவைக்காக ஏன் கையேந்துவது இல்லை ?
ஏன் அவர்கள் பெயரால் நேர்ச்சை
செய்வது இல்லை ?
ஏன் அவர்களின் மண்ணறைகள் மீது
பச்சை துணியை போர்த்துவது இல்லை
ஏன் அவர்களின் மண்ணறையை சுற்றி குத்துவிளக்கு ஏற்றுவது இல்லை ?
இந்த பாரபட்சமான நடவடிக்கையை அங்கீகரிக்கும் இஸ்லாமிய ஆதாரம் என்ன ?
தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டடவர்களிடம் மட்டும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும்
சில வழிபாடுகளை நடத்தலாம்
ஆனால் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் அது போன்ற வழிபாடுகளை நடத்தக்கூடாது என்று
தரம் பிரித்தது குர்ஆன் சுன்னாவா ?
இத்தொடரில் ஏற்கனவே நாம் எழுப்பியுள்ள
பல நியாயமான எதிர் கேள்விகளுக்கும் தர்ஹாக்களை நியாயப்படுத்தும் நபர்களிடம் தெளிவான பதில் இல்லை தற்போது இப்பதிவில் எழுப்பியுள்ள நியாயமான எதிர் கேள்விகளுக்கும் பதில் நிச்சயம் இருக்காது
காரணம் வழிகேடுகளை முரண்பாடுகளை ஆதரிக்கும் எவராலும் மார்க்க ரீதியாக மறுப்புகளை முன் வைக்க இயலாது
தர்ஹா விழாக்களில்
நபிவழி நடந்தால் நரகம் இல்லை என்று
நாகூர் ஹனீபா பாடலையும் படிப்பார்கள்
நபிவழியில் இல்லாத நபியவர்கள் கண்டித்த
பல காரியங்களையும் கட்சேரிகளையும் திருவிழாக்களையும் அவர்களே முன்நின்றும் நடத்துவார்கள் என்பதே நடைமுறையில் அன்றாடம் கண்டு வரும் நிதர்சனமான உண்மை
இறப்பை தழுவிய முஸ்லிமின் தகுதியை வைத்து அறிவிப்பு செய்வதில் பாரபட்சம் காட்டுவதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்த நிலையில்
இறப்பை தழுவிய முஸ்லிம்களை அடக்கம் செய்யும் இடத்தில் பாரபட்சம் காட்டுவதை
எந்த வகையில் இஸ்லாம் ஏற்கும் என்பதை
கீழ் காணும் நபிமொழியை படித்து
நீங்களே சுய முடிவு எடுங்கள்
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ المَسْجِدَ فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ – أَوْ قَالَ قَبْرِهَا – فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த
ஒரு கறுத்த ஆண்
அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார்
அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள் இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா?
அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்
என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்
நூல் . புகாரி 458
இன்ஷா அல்லாஹ் பாகம் நான்கு தொடரும் !!!!!
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
15-12-2025
Comments
Post a Comment