மனித உறுப்பு
உறுப்பும் நம் பொறுப்பே
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1197
26-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
மனித உடலில் அமைந்துள்ள உறுப்புக்களை இரு வகையாக பிரிக்கலாம்
1 தானாகவே இயங்கும் உறுப்புகள்
2 நாமாகவே இயக்கும் உறுப்புகள்
தானாகவே இயங்கும் உறுப்புகளின் மூலம் எந்த மனிதனும் தவறான வழிமுறைகளை வழிகேடுகளை அடைவதில்லை
கிட்னி செயல்பாடு இதய துடிப்பு இன்னும் இது போன்ற உறுப்பின் செயல்பாடுகள் தானாக இயங்கும் உறுப்புக்களுக்கு உவமானமாகும்
கை கால் செயல்பாடு நாவு மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடுகள் நாமாகவே இயக்கும் உறுப்புகளுக்கு உவமானமாகும்
சுருக்கமாக சொன்னால் மனித உடலின் உள் உறுப்புகள் நமது கட்டுப்பாடுகளை மீறியும் வெளி அமைப்பு உறுப்புகள் நமது சுயமான கட்டுப்பாடுகளில் அமைந்துள்ளது
சுய கட்டுப்பாடுகளில் அமைந்துள்ள உறுப்புகளின் மூலம் மனிதன் செய்யும் எந்த தவறுகளையும் நியாயப்படுத்தி இறைவனிடம் தப்பிக்க இயலாது
அதனால் தான் மறுமை விசாரணையின் போது மனித வாய்களுக்கு சீல் வைக்கப்பட்டு மனிதர்களின் கைகளையும் கால்களையும் அவர்களுக்கே எதிராக சாட்சி சொல்லும் நிலையில் பேச வைக்கும் ஆற்றலை வழங்குவதாக அல்லாஹ் கூறுகிறான்
பேசும் ஆற்றல் கை கால்களுக்கு இல்லாது மறுமை விசாரணையில் அவர்களுக்கே எதிராக எப்படி உறுப்புகள் சாட்சி சொல்லும் என்று கற்பனையில் மறுக்க வேண்டாம்
கோடான கோடி உயிரணுக்களின் கூட்டு சேர்கையே மனிதனின் உடல்
இதில் ஒவ்வொரு அணுக்களுக்கும் உயிரும் ஆற்றலும் தனித்தனியாக அமைந்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்
اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்
அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்
(அல்குர்ஆன் : 36:65)
5164. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
விபசாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான் அதை அவன் அடைந்தே தீருவான்
(மனிதனின் கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன)
கண்ணின் விபசாரம் (தவறான) பார்வையாகும்
நாவின் விபச்சாரம் (ஆபாசமான) பேச்சாகும்
மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது.
மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது
அல்லது பொய்யாக்குகிறது
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் -ஸஹீஹ் முஸ்லிம்
+++++++++++++
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்
(அல்குர்ஆன் : 17:36)
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment