மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள்
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** கட்டுரை எண் 1540 ***************** தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகான்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைக்கவே தங்கள் ஊருக்கு வந்தார்கள் என்றே ஒவ்வொரு மகான்களைப்பற்றியும் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது ஆனால் தர்ஹாக்களில் நடைபெற்று வரும் சடங்குகளை வழிபாடுகளை பித்தலாட்டங்களை கண்டால் மகான்கள் பெயரில் சொல்லப்படும் கதைகள் யாவும் அவர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்டவை என்றே கருத தோன்றுகிறது காரணம் தர்ஹாக்களுக்கு செல்லும் எவரும் மகான்களின் மறுமை நன்மைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது இல்லை மாறாக மகான்களிடமே நேரடியாக கையேந்தி சஜ்தா எனும் சாஷ்டாங்கம் செய்து அவர்களையும் குட்டி தெய்வங்களாகவே மாற்றி விட்டனர் பேய் பிசாசு ஓட்டு...