இஸ்லாமிய குற்றவியல் சட்டம்
இஸ்லாமிய குற்றவியல் சட்டமும் அறிவிலிகளின் விமர்சனமும் ********************** கட்டுரை எண் 1519 ************ அபிராமி போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகள் கடும் தண்டனை தீர்ப்பு வழங்கும் போது அரபுநாடுகளில் தரும் தண்டனைகள் போல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நியாயமாக குரல் கொடுக்க கூடியவர்கள் இஸ்லாமிய தண்டனையை விவரிக்கும் போது காட்டுமிராண்டி சட்டம் என்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்டம் என்றும் முரண்பட்டு கூச்சலிடுவதை காண முடிகின்றது அரபுநாடுகளில் தரப்படும் தண்டனை சட்டம் பெரும்பாலும் இஸ்லாம் கூறும் சட்டம் என்பதை உணராது விமர்சிக்கிறார்களா ? அல்லது குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக்கூடாது என்று சிந்திக்காது விமர்சிக்கிறார்களா ? என்ற சந்தேகம் அநேகருக்கு உள்ளது ஒரு மனிதன் எந்த குற்றத்தை செய்கிறானோ அந்த குற்ற...