யார் இவன் ஏன் எதிர்க்கிறான்
யார் இவன் ஏன் எதிர்க்கிறான் ******************** யார் இவன் நமக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு நாம் இவனது தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூராக செயல்பட்டது இல்லையே இவனது குடும்பத்திற்கும் இவனை சார்ந்தோருக்கும் எவ்விதமான இடையூரும் செய்தது இல்லையே அவ்வாறு இருக்க இவன் எதற்கு நம்மை எதிரி போல் பார்க்கிறான் இவன் எதற்கு நம் தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் எதிராக செயல்படுகிறான் இவன் எதற்கு நம் நட்பு வட்டத்தை சிதைக்க முயற்சி செய்கிறான் இவன் எதற்கு நம்மை பற்றி அவதூறு பரப்புகிறான் என்று பல கேள்விகளும் மனஉளைச்சல்களும் பலரின் வாழ்வில் புரியாத புதிராக இருக்கும் வாழும் இடத்தை மாற்றிக்கொள்ளலாமா செய்யும் தொழிலை தவிர்த்து விடலாமா நேரடியாக சென்று எதிர்ப்பின் காரணத்தை கேட்கலாமா என்றும் அடிக்கடி மனதில் பல விரக்தியும் ஏற்படும் இதற்கு காரணம் என்ன ? ஒரு மனிதன் வன்மம் நிறைந்த எதிரியாக மாறுவதற்கும் மாற்றப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம் உங்களின் பேச்சு உங்களின் எழுத்...