யார் இவன் ஏன் எதிர்க்கிறான்
யார் இவன் ஏன் எதிர்க்கிறான்
********************
யார் இவன்
நமக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு
நாம் இவனது தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூராக செயல்பட்டது இல்லையே
இவனது குடும்பத்திற்கும் இவனை சார்ந்தோருக்கும் எவ்விதமான இடையூரும் செய்தது இல்லையே
அவ்வாறு இருக்க
இவன் எதற்கு நம்மை எதிரி போல் பார்க்கிறான்
இவன் எதற்கு நம் தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் எதிராக செயல்படுகிறான்
இவன் எதற்கு நம் நட்பு வட்டத்தை சிதைக்க
முயற்சி செய்கிறான்
இவன் எதற்கு நம்மை பற்றி அவதூறு பரப்புகிறான்
என்று பல கேள்விகளும் மனஉளைச்சல்களும்
பலரின் வாழ்வில் புரியாத புதிராக இருக்கும்
வாழும் இடத்தை மாற்றிக்கொள்ளலாமா
செய்யும் தொழிலை தவிர்த்து விடலாமா
நேரடியாக சென்று எதிர்ப்பின் காரணத்தை கேட்கலாமா
என்றும் அடிக்கடி மனதில் பல விரக்தியும் ஏற்படும்
இதற்கு காரணம் என்ன ?
ஒரு மனிதன் வன்மம் நிறைந்த எதிரியாக மாறுவதற்கும் மாற்றப்படுவதற்கும்
பல காரணங்கள் இருக்கலாம்
உங்களின் பேச்சு
உங்களின் எழுத்து
உங்களின் முன்னேற்றம்
உங்களின் தன்னம்பிக்கை
உங்களின் தன்மானம்
உங்களுக்கு மக்கள் மனதில் இருக்கும் மரியாதை
உங்கள் கருத்தை திசை திருப்பும் கயவர்களால் ஏற்படுத்தப்படும் சூழ்ச்சி வலை
உங்களிடம் கேட்கப்படும் ஆலோசனைகளால் உங்களை சார்ந்தோரே வெளியில் பரப்பும்
தவறான தகவல்கள்
உங்களின் தனித்திறமை
நீங்கள் மணம் புரிந்த குடும்பம்
உங்களின் ஏழ்மை
உங்களின் கோழைத்தனம்
இப்படி ஏராளமான காரணங்கள் பின்னனியில்
இடம் பெற்றிருக்கலாம்
இதில் எதுவாக இருப்பினும் எதிரியை போல்
தரம் தாழ்ந்து நடக்க திட்டமிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்
நேருக்கு நேர் முகம் பார்த்து நடக்கும்
சூழலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்
சில வேளை நேரடியாக எதிர் கொள்ளும் சூழல் அமைந்தாலும் கோழைத்தனமாக விலகி செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள் என்ற நபிமொழியை நீ சாதகமாக்கிக்கொள்
அன்றாடம் இறைவனிடம் கையேந்தி
உன் வாழ்வுக்கு எதிராக செயல்படும் மனிதனுக்கு எதிராக பிரார்த்தனை செய்வதை வழக்கமாக்கிக்கொள்
நிச்சயம் உனது பிரார்த்தனையின் பலனை
உன் வாழ்நாளில்
கண் முன் காண்பாய்
பிறர் மூலமும் கேள்விப்படுவாய்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
23-11-2024
Comments
Post a Comment