அறிவும் அறிவியலும்
அறிவும் அறிவியலும் மார்க்கத்தை தீர்மானிக்காது *************************** இஸ்லாம் எச்சரிக்கும் வழிகேடுகளுக்கு பகுத்தறிவு தீர்வு தராது மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும் காரணம் பகுத்தறிவும் அறிவியலும் ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்) இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால் அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு குறிப்பிடும் ஆனால் அச்செயலை நபிமொழி தவறு என்று குறிப்பிடுகிறது நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று குறிப்பிடும் ஆனால் அச்செயலை பாவம் என்று நபிமொழி குறிப்பிடுகிறது இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால் மறுமை வெற்றியை தீர்மான...