சுபுஹான மவ்லித் என் பார்வை
சுபுஹான மவ்லித் பற்றி
எனது பார்வை
++++++++++
Bismillahir Rahmanir Raheem
********
கட்டுரை எண் 1425
*********
மார்க்கத்தின் பெயரால் ஒரு மனிதன் தவறான ஒன்றை நடைமுறை படுத்துகிறான் என்றால்
1 அறியாமை
2 தவறான புரிதல்
தமிழகத்தில் தற்போது பள்ளிவாசல்களில் நடை பெற்று வரும் அரபு பாடல் சுபுஹான மவ்லித் என்பது இந்த இரு காரணங்களுக்காக அதிகம் நடைபெறுவது இல்லை
காரணம் அந்தளவுக்கு சுபுஹான மவ்லிதின் அபத்தங்கள் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான கருத்துக்கள் முரண்பாடுகள் கட்டுக்கதைகள் தெளிவாக பாமரர்களே உணரும் விதம் விளக்கப்பட்டு விட்டது
சமூகவலைதளங்கள் மூலமாக சுபுஹான மவ்லிதுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விவாதங்கள் தமிழ் மொழியில் பரவலாக்கப்பட்டு விட்டது
புதிதாக இஸ்லாத்தில் நுழையும் எவரும் சுபுஹான மவ்லித் பாடலை படித்து இஸ்லாத்தில் வருவதும் இல்லை
சுபுஹான மவ்லித் என்பது மார்க்கம் என்று அவர்களே கருதுவதும் இல்லை
ஆனால் பல பரம்பரை முஸ்லிம்கள் சுபுஹான மவ்லித் என்ற அரபு பாடலை தூக்கி பிடித்து சுற்றுகின்றனர் என்றால் அவர்களிடம் இருக்கும் ஈகோவும் இத்தனை வருடம் பக்தியுடன் நடைமுறை படுத்தி வந்த சுபுஹான மவ்லிதை இவர்களுக்காக எப்படி நாம் புறம் தள்ளுவது என்ற வீம்பும் தான் காரணம்
பல இறையில்லங்களில் இமாம் மோதினார் மட்டுமே மக்தப் மதரசா மாணவ மாணவிகளை வைத்து வலுகட்டாயமாக படித்து வருகின்றனர்
சில இடங்களில் சுபுஹான மவ்லித் மீது அதிருப்தி உடைய இமாம்கள் கூட பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிர்பந்தத்திற்கு உட்பட்டே மனவெறுப்புடன் ஊதியத்திற்காக படித்து வருகின்றனர்
இந்த எதார்த்த உண்மையை நான் புரிந்து பல வருடம் ஓடி விட்டது
இப்போதும் ஆணித்தரமாக கூறுகின்றேன்
சுபுஹான மவ்லித் அரபு பாடலை பத்து இலட்சம் முறை ஒருவர் பக்தியுடன் ஓதினாலும்
அவர் நபி( ஸல்) அவர்கள் கற்று தந்த ஸலவாத்தை ஒரு முறை ஓதுவதின் மூலம் பெறும் நன்மையை கூட அடைய மாட்டார்
மாறாக பித்அத்தை நிலைநாட்ட துடிக்கிறார் என்பது மட்டுமே பொருள்
பித்அத் சுன்னத்திற்கு மார்க்க அடிப்படையில் விளக்கம் தெரியாத ஒருவரிடம் ஓராயிரம் முறை சத்தியத்தை எடுத்து சொன்னாலும் அவர் பித்அத்தை விட்டு விலகுவார் என்று எதிர்பார்ப்பது கானல் நீருக்கு சமம்
********
அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்
எவர் நம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும்
அவை நூறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தாலும் சரியே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: புகாரீ, முஸ்லிம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment