Posts

Showing posts from January, 2022

கொள்கை தடுமாற்றம் ஏன்

கொள்கை தடுமாற்ற பின்னனி                      ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1433                       30-01--2022                          ******* ஒரு காலத்தில் சத்தியத்தை நிலை நாட்ட கடுமையாக தன்னை தியாகம் செய்த சிலர் திடீரென பிற மக்களே வேதனை படும் விதம் அவரே அதுவரை  எதிர்த்த கொள்கையை நோக்கி பயணிப்பதின் காரணம் என்ன  பணமே என்பது அவரது தடுமாற்றத்திற்கு பிறர் கற்பிக்கும்  பொதுவான குற்றச்சாட்டு  இது பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாமே தவிர இதுவே மூல காரணம் என்று அனைவருக்கும் சொல்லி விட முடியாது  யாருடன் இணைந்து கொள்கை முன்னேற்றத்திற்கு  குரல் கொடுத்தாரோ  அவர்களில் சிலர் இவரது வாழ்கை  முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்திருக்க கூடும்  சத்தியத்திற்கு குரல் கொடுப்பதுடன் இவர்களுடன் இணைந்திருந்தால் வாழ்கையின் சிக்கல்களுக்கு கைகொடுப்பார்கள் என்ற அபரிதமான  எண்ணம் அவரது வாழ்வில் நிறைவேறாதும் இருந்திருக்க கூடும் சத்தியத்திற்கு குரல் கொடுத்தாலும் சத்திய அணியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளுக்கு அவசியமற்ற பதிலை கூற கூடிய நிர்பந்தத்திற்கு இவரே ஆளாக நேரிட இருந்திருக்க கூடும

உறக்கத்தை தொலைத்த கண்கள்

        உறக்கம் தொலைத்த                        கண்கள்                    ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1432                       23-01-2022                          ******* தூக்கமே மனித ஆரோக்யத்தின் முக்கியமான பாலம்  தூக்கமின்மையே பல உடலியல் உலவியல்  நோய்களின் தாயகம்  ஒரு நாளில் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம் என்கிறது மருத்துவம் தூக்கம் வரும் போது தூங்குவது என்பது தற்காலத்தில் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத சூழ்நிலையாக மாறி விட்டது ஆனால் தூங்க வேண்டிய நேரம் வாய்ப்பாக அமையும் போது அதை  வீணாக கழிப்பது என்பது தான் அறிவீனம்  ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்குதல் என்பது இரவு நேரத்தில் அமைத்து கொள்வது தான் மிகவும் சிறப்பானது  காரணம் இருள் நிலவும் சந்திர  நேரத்தில் கண்கள் உறங்கும் நிலையில் தான் மெலடோனின்  என்ற ஹார்மோனை உடல் சுரக்கிறது  இந்த ஹார்மோனை பகல் நேர தூக்கத்தில் எவராலும் பெற இயலாது  இயற்கையான தூக்க சுழற்சியை ஒழுங்காக அமைப்பதற்காக உடலின் சர்க்காடியன் இசைவைச் (Circadian rhythm) சீராக்க இது தான்  உதவுகிறது. மெலடோனின் மூளையில் உள்ள பினியல் ச

மரணம் விந்தை அல்ல

        மரணம் விந்தையல்ல                   ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                                             ******* கோடான கோடி மக்களை இது வரை மரணம்  தழுவி உள்ளது இப்போதும் தழுவி கொண்டுள்ளது இதில் இறைதூதர்கள் நல்லோர்கள்  வல்லவர்கள் சாதனையாளர்கள்  புரட்சி படைத்தவர்கள் ஆண்டவர்கள் பணம் படைத்தவர்கள் ஏழ்மை மக்கள் அரக்கர்கள் அயோக்கியர்கள்  இப்படி ஏராளம்  ஆனால் இதுவரை  எவருடைய மரணத்திற்காகவும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு வினாடி கூட நின்றதும் இல்லை தடுமாறியதும் இல்லை காரணம் மரணம் என்பது அதிசயம் அல்ல விந்தையும் அல்ல  ஏதுமே இல்லாத நிலையில் இருந்து உயிருள்ள மனிதனாக பூமியில்  ஜனித்தது தான் அதிசயம்  ஜனனத்தின் காரணத்தை புரிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து மடிபவனுக்கு  மரணம் என்பது சோதனை அல்ல  அதுவே மறுமை வாழ்வின் சாதனை  اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا  وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்

வாழ்த்து நாடகம்

            வாழ்த்து நாடகமும்                  உண்மையும்                  ♦♦♦♦♦        J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1431                       02-01-2022                          ******* சுதந்திர தின வாழ்த்து ஆசிரியர் தின வாழ்த்து உழைப்பாளர் தின வாழ்த்து திருமண தின வாழ்த்து பிறந்த தின வாழ்த்து இப்படி வருடம் முழுவதும் வாழ்த்துக்களுக்கு பஞ்சம் இல்லை நூறாண்டு காலம் வாழ்க என்று பல காலமாக திருமணத்தில் அனைத்து சமூகமும் வாழ்த்திக் கொண்டு தான் உள்ளனர் ஆனால் வாழ்தியது போல்  நூறாண்டு காலம் வாழ்ந்தோர்  எத்தனை என்பதே கேள்வி குறிதான்   ? உலக மரபில் வாழ்த்து என்பதே ஒரு சடங்கு தான் வாழ்துபவருக்கும் அதில் ஈடுபாடு இல்லை வாழ்த்து பெறுவோருக்கும்  அதில் ஈடுபாடு இல்லை நூறாண்டு காலம் வாழ வாழ்த்து பெறப்பட்ட மணமகன் நாற்பது வயதில் மரணித்து விட்டால் நூறாண்டு காலம் வாழ்த்தினீர்களே ஆனால் என் மகன்  அவ்வாறு வாழாது அர்ப்ப வயதில் மரணித்து விட்டானே  என்று யாரும் வாழ்த்து வழங்கியவரை நோக்கி  சண்டைக்கு வரப்போவது இல்லை நூறாண்டு காலம் வாழ்த்து பெறாத காரணத்தால் எவரது திருமணமும் இதுவரை தடை