மரணம் விந்தை அல்ல

        மரணம் விந்தையல்ல

                  ♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI                   
                         *******
கோடான கோடி மக்களை
இது வரை மரணம்  தழுவி உள்ளது

இப்போதும் தழுவி கொண்டுள்ளது

இதில் இறைதூதர்கள் நல்லோர்கள் 
வல்லவர்கள் சாதனையாளர்கள் 
புரட்சி படைத்தவர்கள்
ஆண்டவர்கள்
பணம் படைத்தவர்கள்
ஏழ்மை மக்கள்
அரக்கர்கள்
அயோக்கியர்கள் 

இப்படி ஏராளம் 

ஆனால் இதுவரை 
எவருடைய மரணத்திற்காகவும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு வினாடி கூட நின்றதும் இல்லை தடுமாறியதும் இல்லை

காரணம் மரணம் என்பது அதிசயம் அல்ல விந்தையும் அல்ல 

ஏதுமே இல்லாத நிலையில் இருந்து உயிருள்ள மனிதனாக பூமியில்  ஜனித்தது தான் அதிசயம் 

ஜனனத்தின் காரணத்தை புரிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து மடிபவனுக்கு 
மரணம் என்பது சோதனை அல்ல 
அதுவே மறுமை வாழ்வின் சாதனை 


اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا  وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்
மிக மன்னிப்பவன்

         (அல்குர்ஆன் : 67:2)

       நட்புடன்  J . இம்தாதி

 


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்