சுபுஹான மவ்லித்
சுபுஹான மவ்லிதை படிக்கலாமா குழி தோண்டி புதைக்கலாமா **************** குர்ஆனில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை சுன்னாவில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை வாழ்நாளில் ஒரு முறை கூட சஹாபாக்கள் படிக்காத சுபுஹான மவ்லிதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருவர் கூட கண்ணால் பார்க்காத சுபுஹான மவ்லிதை மகான்களில் ஒருவர் கூட மேற்கோள் காட்டாத சுபுஹான மவ்லிதை நான்கு மத்ஹபுகளில் ஒன்றில் கூட குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை படித்தால் நன்மை வரும் பாடினால் நன்மை தரும் படிப்பதே நபிகளாரை மதிப்பது படிப்பதே நபிகளாரை துதிப்பது என்று கருதும் மனிதனை விட பரிந்து பேசும் மனிதனை விட மார்க்க மூடர் எவரும் இல்லை திருக்குர்ஆனின் ஒரு எழுத்தை படித்தால் கிடைக்கும் பத்து நன்மை கூட நபிகளார் பேசிய ஹதீஸ்களின் ஒட்டு மொத்த எழுத்துக்களுக்கும் கிடைக்காது என்ற அடிப்படை அறிவை கூட புரிந்து கொள்ளாதவரே சுபுஹான மவ்லித் என்ற அரபுக்கவிதை பாடல்களை மறுமையில் நன்மை தரும்...