சுபுஹான மவ்லித்
சுபுஹான மவ்லிதை படிக்கலாமா
குழி தோண்டி புதைக்கலாமா
****************
குர்ஆனில் ஒரு இடத்தில் கூட
குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை
சுன்னாவில் ஒரு இடத்தில் கூட
குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை
வாழ்நாளில் ஒரு முறை கூட
சஹாபாக்கள் படிக்காத சுபுஹான மவ்லிதை
ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருவர் கூட
கண்ணால் பார்க்காத சுபுஹான மவ்லிதை
மகான்களில் ஒருவர் கூட மேற்கோள் காட்டாத சுபுஹான மவ்லிதை
நான்கு மத்ஹபுகளில் ஒன்றில் கூட குறிப்பிடப்படாத சுபுஹான மவ்லிதை
படித்தால் நன்மை வரும்
பாடினால் நன்மை தரும்
படிப்பதே நபிகளாரை மதிப்பது
படிப்பதே நபிகளாரை துதிப்பது
என்று கருதும் மனிதனை விட
பரிந்து பேசும் மனிதனை விட
மார்க்க மூடர் எவரும் இல்லை
திருக்குர்ஆனின் ஒரு எழுத்தை படித்தால் கிடைக்கும் பத்து நன்மை கூட நபிகளார் பேசிய ஹதீஸ்களின் ஒட்டு மொத்த எழுத்துக்களுக்கும் கிடைக்காது என்ற அடிப்படை அறிவை கூட புரிந்து கொள்ளாதவரே சுபுஹான மவ்லித் என்ற அரபுக்கவிதை பாடல்களை மறுமையில் நன்மை தரும் ஒன்றாகவும் கருதுவார்
யார் எழுதியது என்றே தீர்க்கமாக சொல்ல முடியாத சுபுஹான மவ்லித் என்ற அரபு பாடலின் எழுத்துக்களுக்கும் வரிகளுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் கருதுவார்
சுபுஹான மவ்லிதை படித்தால்
நன்மை என்றும் உத்திரவாதம் இல்லை
சுபுஹான மவ்லிதை புறக்கணித்தால்
நரகம் என்றும் எச்சரிக்கை இல்லை
சுபுஹான மவ்லிதை படித்தால் சுவனம் என்றும் நற்சான்று இல்லை
எவ்வகையிலும் உத்திரவாதம் இல்லாத ஒன்றுக்கு உயிர் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது
மார்க்க சூனியங்களின் நடைமுறையே தவிர
மார்க்க ஞானிகளின் குணாதிசயம் இல்லை
சுன்னத்திற்கான விளக்கம் அறிந்தவர்களுக்கு சுபுஹான மவ்லித் பித்அத் என்பது ஆணித்தரமாக புரிய முடியும்
பித்அத்திற்கான விளக்கம் அறிந்தவர்களுக்கு
சுபுஹான மவ்லித் பித்அத் என்றும் தெளிவாக விளங்க இயலும்
பித்அத்துகள் யாவும் நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதும் உணர முடியும்
படிக்கப்படும் கருத்துக்கள் அழகாக இருப்பதால் மறுமையில் நன்மை கிடைக்கப்போவது இல்லை
படிக்கப்படும் கருத்துக்கள் புரியாது இருந்தாலும் அல்லாஹ் ரசூல் சொன்னவையாக மட்டும் இருந்தாலே மறுமையில் பிரதிபலன் கிடைக்கும்
இதை அறிய மார்க்க ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
மாறாக அடிப்படை முஸ்லிமாக இருந்தாலே போதுமானது
சுபுஹான மவ்லிதை மறுமை நன்மை நாடி படிக்கலாமா என்று சிந்திப்பதை விட
(இபாதத் ) வழிபாடு என்ற நிலையை விட்டும்
குழி தோண்டி புதைக்கலாமா என்று
குர்ஆன் சுன்னா பார்வையில் சிந்திப்பதே முஸ்லிம்களின் சரியான அணுகுமுறை
وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ
எவன் அல்லாஹ்வுக்கும்
அவன் தூதருக்கும் மாறு செய்து இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ
அவனை நரகில் புகுத்துவான்
அவன் அங்கு (என்றென்றும்)
தங்கி விடுவான்
மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு
(அல்குர்ஆன் : 4:14)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
4-9-2024
Comments
Post a Comment