உயர்சாதி
உயர்சாதி மேல்சாதி ****************** பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்று பிற மனிதனை கீழ்சாதியாக கருதும் எவனும் !! தீட்டு பார்க்காத ஒன்று பணம் !! பிச்சைக்காரன் தொட்டு கொடுத்த பணத்தையும் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி தொட்டு கொடுத்த பணத்தையும் நாவிதன் சிரைத்து உழைத்து தொட்டு கொடுத்த பணத்தையும் எவ்வித பாகுபாடும் இல்லாது பூஜை அறையில் புனிதமாக பாதுகாப்பாக வைப்பான் உயர்சாதிக்காரன் என்று தன்னை நினைப்பவனை விட உலகில் உயர்ந்து இருப்பது தொழிலாளியால் அச்சடிக்கப்பட்ட பணமே பிறக்கும் நேரம் பணத்துடன் எவனும் பிறப்பது இல்லை இறக்கும் நேரம் பணத்தை எவனும் உடன் எடுத்துச்செல்வதும் இல்லை செத்தப்பிணமாக மாறும் எந்த பிணத்தையும் வேறுபடுத்தி ஆகாயத்தில் மிதக்க வைப்பதும் இல்லை பிறகோள்களில் விஷேசமாக அடக்கப்படுவதும் இல்லை மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் மனிதர்களில் மனிதநேயத்துடன் எவன் நடக்கிறானோ அவ...