புலம்பல்
புலம்பல் மனிதர்கள் கட்டுரை எண் 1150 =========================== J . யாஸீன் இம்தாதி ********** எனக்கு ரெம்ப கவலையா இருக்கு கவலை நீங்க ஏதாவது வழி சொல்லுங்க எனக்கு ரெம்ப மனபாரமா இருக்கு பாரம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்க இந்த வார்த்தைகளை அடிக்கடி பலரிடம் கேள்வி படுகிறோம் நெருப்பில் நான் கையை வைக்கிறேன் சுடாது இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் மழையில் நான் நினைகிறேன் குளிராது இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டால் இக்கேள்வி எப்படி அனார்த்தமானதோ அதே போன்ற கேள்வியின் வரிசையில் தான் மேல் உள்ள கேள்விகளும் அமைந்துள்ளன கவலை மனபாரம் துக்கம் ஏக்கம் தேடல் போன்ற எதுவும் உடல் நோய் தொடர்புடையது அல்ல அதாவது கிருமிகளால் ஏற்படும் வினைகள் அல்ல கிருமிகளால் ஏற்படும் விளைவு...