புலம்பல்

              புலம்பல் மனிதர்கள் 

                கட்டுரை எண் 1150
      ===========================
             J . யாஸீன் இம்தாதி
                       **********
எனக்கு ரெம்ப கவலையா இருக்கு
கவலை நீங்க ஏதாவது 
வழி சொல்லுங்க

எனக்கு ரெம்ப மனபாரமா இருக்கு 
பாரம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்க

இந்த வார்த்தைகளை அடிக்கடி பலரிடம் கேள்வி படுகிறோம் 

நெருப்பில் நான் கையை வைக்கிறேன் 
சுடாது இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் 

மழையில் நான் நினைகிறேன்
குளிராது இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் 

என்று ஒருவர் கேட்டால் இக்கேள்வி எப்படி அனார்த்தமானதோ அதே போன்ற கேள்வியின் வரிசையில் தான் மேல் உள்ள கேள்விகளும் அமைந்துள்ளன 

கவலை மனபாரம் துக்கம் ஏக்கம் தேடல் போன்ற  எதுவும் 
உடல்  நோய் தொடர்புடையது அல்ல 
அதாவது கிருமிகளால் ஏற்படும் வினைகள் அல்ல 
கிருமிகளால் ஏற்படும் விளைவுகளுக்கு தான் மனிதனால் மருத்துவத்தின் மூலம் தீர்வு சொல்ல முடியுமே தவிர
உளவியல் ரீதியாக ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் மருத்துவத்தாலும் அறிவியல் மூலமும்  தீர்வு தர இயலாது 

இந்த சாதாரண உண்மையை மனிதர்களில் பலர் உணருவதே இல்லை

இதை உணர வைக்காது எந்த மாற்று வழிகளும் பாதிப்படைந்தோருக்கு தீர்வை தராது 

கவலைக்கான காரணம் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு தான் நூறு சதவிகிதம் அறிய முடியும் 

அதை சிந்தித்து 
இந்த கவலையின் பின்னனி என்ன ?
இந்த கவலை நம்மை தாக்கியதின் காரணம் என்ன ?
இந்த கவலை எனது  அறிவீனத்தால் ஏற்பட்டதா ?
அல்லது பிறரின் சூழ்சியால் ஏற்பட்டதா ?
இந்த கவலை நிலையானதா ? சூழலுக்கு உரியதா ?
இந்த கவலை உலகில் யாருக்கும் வராத கவலையா ?
அல்லது எனக்கு  மட்டுமே ஏற்பட்ட கவலையா  ?

என்று சுயமாக தனிமையில் சிந்தித்து பார்த்தாலே அதற்கான தீர்வை பாதிக்கப்பட்டவரின்  பகுத்தறிவே பதில்  சொல்லும் 

பகுத்தறிவை மூட்டை கட்டி விட்டு
எதார்த்த நடைமுறையை குழி தோண்டி புதைத்து விட்டு
கற்பனை வாழ்வில் மிதந்து கொண்டு
தன்னால் இயலாத 
தனக்கு அவசியம் இல்லாத 
பிரச்சனைகளில் மூக்கை நுழைப்போர் எவராக இருப்பினும் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்

அந்த விளைவுகளை எதிர் கொள்ளும் வலிமை இருக்கும் வரை வாழ்நாள் இருக்கவே செய்யும் 

விளைவுகளை எதிர் கொள்ள இயலாத சூழலை உடல்நிலையே அடையும் போது தான் மரணமே மனிதனை தழுவுகிறது 

இந்த சாரத்தை சந்ததிகளிடம் வளரும் பருவத்திலேயே ஊட்டுங்கள் 
அவர்களின்  வாழ்வு பக்குவப்படும் இன்ஷா அல்லாஹ் 


وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ‏

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்

                (அல்குர்ஆன் : 42:30)



          நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்