முன்னறிவிப்புகள்
முன்னறிவிப்புகளை அணுகுவது எப்படி ? •••••••••••••••••••••••••• கட்டுரை எண் 1504 ************** கியாமத் நாளை முன்னிட்டு நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் கூறிச்சென்ற முன்னறிவிப்புகள் ஏராளம் உள்ளன இந்த முன்னறிவிப்புகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ? என்பதில் மக்களிடம் அறியாமை நிலவுவதை பரவலாக காண முடிகின்றது ஒவ்வொரு காலத்திலும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளை படிக்கும் முஸ்லிம்கள் அந்த முன்னறிவுப்புகளை அவர்களின் காலத்திற்குப்பின் நடக்கவிருக்கும் முன்னறிவிப்புகளாக மாத்திரமே புரிந்து கொள்கின்றனர் அவ்வாறு புரிந்து கொள்வது சரி என வைத்துக்கொண்டால் கியாமத் நாள் வரை அவ்வாறே அனைவரும் புரிந்து கொள்வர் அப்படியனால...