முன்னறிவிப்புகள்

     முன்னறிவிப்புகளை அணுகுவது
                               எப்படி   ?
              ••••••••••••••••••••••••••
                 கட்டுரை எண் 1504
                     **************

கியாமத் நாளை முன்னிட்டு 
நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் கூறிச்சென்ற முன்னறிவிப்புகள் ஏராளம் உள்ளன

இந்த முன்னறிவிப்புகளை 
நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ? என்பதில் மக்களிடம் அறியாமை நிலவுவதை பரவலாக 
காண முடிகின்றது 

ஒவ்வொரு காலத்திலும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளை படிக்கும் முஸ்லிம்கள் 
அந்த முன்னறிவுப்புகளை அவர்களின் காலத்திற்குப்பின் நடக்கவிருக்கும் முன்னறிவிப்புகளாக மாத்திரமே புரிந்து கொள்கின்றனர்

அவ்வாறு புரிந்து கொள்வது சரி 
என வைத்துக்கொண்டால் கியாமத் நாள் வரை அவ்வாறே அனைவரும் புரிந்து கொள்வர் 

அப்படியனால் நபி (ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் 
எப்போது நிகழும் என்ற கேள்வி எழும்  

இதற்கு அடிப்படை  முன்னறிவிப்புகளை பற்றிய அறியாமையே மூல காரணம் 
  

1- நடந்துவிட்ட முன்னறிவிப்புகள்
2-நடைபெற்று வரும்
   முன்னறிவிப்புகள்
3- நடக்கவிருக்கும் முன்னறிவிப்புகள்
4- கியாமத் நாள் மிக நெருக்கத்தில்
      நடைபெற இருக்கும் பெரிய
      முன்னறிவிப்புகள் 

என்று நான்கு வகைகளில்  அமைந்துள்ளது 

மதுபானம் மிகைத்து விடும்
கொலை அதிகரித்து விடும்
விபச்சாரம் பெருகி விடும் 
பள்ளிவாசல்கள் அலங்கரிப்பதில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தப்படும் 
போலியான  இறைத்தூதர்கள் கிளம்புவார்கள் 
போன்ற முன்னறிவிப்புகள் 
நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் முன்னறிவிப்புகளாகும் 

இது போன்ற முன்னறிவிப்பு தொடர்பான  ஹதீஸ்களை படிக்கும் பொழுது அவைகள் இனிமேல் நடக்கவிருக்கும் முன்னறிவிப்புகளாக புரிந்து கொள்ளக்கூடாது 
மாறாக நடந்து கொண்டிருக்கும் முன்னறிவிப்புகளாகவே கருத வேண்டும் 


காரணம் கியாமத் நாளுக்கு நெருக்கமாக 
நாம் மட்டும் அல்ல மாறாக நபி (ஸல்) அவர்களே 
கியாமத் நாள் நெருங்கி விட்ட காலத்தில் தான் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் 

கியாமத் நாள் நெருங்கி விட்டது
சந்திரனும் பிளந்து விட்டது 
என்ற திருமறை 51-1 வசனம் நபி (ஸல்) அவர்கள் வாழும் போதே வழங்கப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களாகும்
அப்படியானால் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே கியாமத் நாள் நெருக்கத்தில் உள்ளது என்பதே பொருள் 

இறைவனின் பார்வையில் கியாமத் நாள் என்ற கணக்கீடு மிகவும் குறைவானது 
நம் பார்வையில் தான் நாட்களின் கணக்கீடு நீளமானது 

உலகம் படைக்கப்பட்ட நாளில் இருந்து பார்த்தால் கியாமத் நாள் தூரமானது 
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து கணக்கிட்டால் கியாமத் நாள் நெருக்கமானது

மஹ்தியின் வருகை
யஃஜுஜ் மஃஜூஜின் வருகை
தஜ்ஜாலின் வருகை
ஈசா நபியின் வருகை போன்றவை 
கியாமத் நாள் மிக நெருக்கத்தில் நிகழக்கூடிய முன்னறிவிப்புகளாகும்

ஆனால் நாம் தற்போது அக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை 
மாறாக அந்நிகழ்வுகள் உலகில் நடைபெறும் போது 
வாழும் மனிதர்களே அந்த முன்னறிவிப்புகளை சந்தேகத்திற்கு இடம் இல்லாத அளவுக்கு விளங்கி கொள்வார்கள் 

அந்த முன்னறிவிப்புகள் நிகழும் போது அவைகளை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் மாற்றுக்கருத்தும்  நிலவாது 



முன்னறிவிப்புகளில் கவனம் செலுத்துவதை விட 
எந்த  முன்னறிவிப்புகளை கண்கூடாக தற்போது  காணுகிறோமோ அவைகளை வைத்து இறைநம்பிக்கையை வலுவாக்கி கொள்வது தான் அடிப்படை படிப்பினையாகும் 


اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍ‌ ۙوَّمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது

                (அல்குர்ஆன் : 6:134)



       நட்புடன்  J . யாஸீன்  இம்தாதி

                             6-12-2023



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்