பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்
பள்ளியின் கண்ணியம்
காப்போம்
அரசியல்வாதிகளை
புறக்கணிப்போம்
♦♦♦♦♦♦♦♦♦♦
30-03--19
கட்டுரை எண்1242
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இறைவனை திக்ரு செய்வதற்க்கும் குர்ஆன் ஓதுவதற்க்கும் இறைவனை வணங்குவதற்க்கும் கட்டப்பட்ட இடமே பள்ளிவாசல்கள்
இதில் நுழையும் மனிதன் யாராக இருந்தாலும் அவன் தன்னை இறைவனின் அடிமை என்ற உணர்வை தாண்டி வேறு எந்த சிந்தனைகளையும் வளர்க்கவோ அல்லது அதை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரவு தெரிவிக்கவோ அல்லது அதற்க்கு ஆதரவு திரட்டவோ இஸ்லாத்தில் கடுகளவும் அனுமதி இல்லை
தொலைந்து போன பொருளை கூட பள்ளிவாசலில் பொதுவாக அறிவிப்பு செய்யாதீர்கள் என்ற அளவுக்கு இஸ்லாம் பள்ளியின் கண்ணியத்தை காக்குமாறு சொல்கிறது
குறிப்பாக வர இருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்கும் கேந்திரமாக பள்ளிவாசல்களை ஆக்கி விட கூடாது
முஸ்லிம் சமூகத்திற்க்கு பாதுகாப்பான கட்சி என்று ஒரு கட்சியை நீங்கள் நினைத்தாலும் சரி
அல்லது விரோதமான கட்சி என்று நீங்கள் நினைத்தாலும் சரி அது போன்றோர்களுக்கு குரல் கொடுக்கும் களமாகவும் அல்லது அவர்களை எதிர்க்கும் களமாகவும் பள்ளிவாசல்களை பயன்படுத்த கூடாது
சில இடங்களில் ஜும்மா தொழுகை முடிந்து பள்ளியை விட்டு மக்கள் வெளியேறும் போது பள்ளிவாசல் வாசலிலே அரசியல்வாதிகள் நின்று அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஓட்டு சேகரிக்கும் நிலையை சில பள்ளிவாசல் நிர்வாகமே அனுமதி அளிக்கும் காட்சியை பார்க்கிறோம் இதுவும் தவிர்க்க வேண்டிய விசயமாகும்
சமுதாயத்திற்க்கு பலன் எனும் பெயரில் அரசியல்வாதிகள் தரும் ஓட்டுக்கான லஞ்சப்பணத்தை சில நிர்வாகிகளே பெற்று அதை விநியோகிக்கும் அவல நிலையை கடந்த காலங்களில் நாம் கேள்வி பட்டுள்ளோம்
இவையாவும் ஹராமான செயல் முறையாகும்
அதே போல் ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்திற்க்கும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திற்க்கும் விரோதமானவர்கள் என்ற பெயரை பகிரங்கமாக பெற்றுள்ள பீஜேபி கட்சியை அல்லது அதற்க்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆதரவாக சுயநலத்திற்காகவும் பதவிக்காவும் முஸ்லிம் சமுகத்தை மூளை சலவை செய்யும் சிலர்களையும் சமீபத்தில் காண முடிகிறது
இவர்களை அந்தந்த பகுதியில் வாழும் ஜமாத் உறுப்பினர்கள் ஜமாத்தை விட்டு நீக்க உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
ஓட்டு போடுதல் என்பது இந்திய ஜனநாயகத்தின் கடமை
அதை யாருக்கு போட வேண்டும் ? ஏன் போட வேண்டும் ? என்ற விளக்கங்களை எல்லாம் பள்ளிவாசலுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்
சமுதாய பாதுகாப்பை முன்னிருந்தி மார்க்க ரீதியாகவும் நடை முறை ரீதியாகவும் அறிவு பூர்வமாகவும் உபதேசம் செய்யுதல் என்பது வேறு அரசியல் பேசுதல் என்பது வேறு இதை உலமாக்களும் தாயீக்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்
பள்ளியின் கண்ணியத்தை காப்போம் இன்ஷா அல்லாஹ்
اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ
யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய் (அவற்றின் ஊழியர்களாய்) ஆக முடியும்! அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்
(அல்குர்ஆன் : 9:18)
فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِۙ
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான் அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்
(அல்குர்ஆன் : 24:36)
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment