வழிகேடுகளை விரும்பும் சமூகம்
வழிகேடுகளை விரும்பும் சமுதாயம் ♦♦♦♦♦♦♦♦♦ J . YASEEN IMTHADHI கட்டுரை எண் 1426 14-11-2021 ******* அரும்பு மீசை முளைக்காத சிறுவனின் உணர்வுகளை கூட தோண்டி எடுக்கும் அளவு ஆபாச காட்சிகளும் சமூகவலைதளத்தில் குடும்ப பெண்களின் குத்தாட்ட காட்சிகளும் அருவெறுப்பான செய்முறைகளும் எடுத்து கூறவே தயங்கும் கீழ்நடை பேச்சுக்களும் விபச்சார அழைப்புகளும் கட்டுப்பாடுகளே இல்லாது பெருகி விட்ட நிலையில் பாலியல் கொடுமைகளை பற்றி மட்டும் பேசி கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியமாகும் ஆசிரியர் மாணவியிடம் தவறாக பேசுவதும் நடப்பதும் மாணவர்கள் ஆசிரியைகளிடம் தவறாக நடப்பதும் கிழவன் சிறுமியை கற்பழிப்பதும் ஆச்சரியமான விசயம் அல்ல...