வழிகேடுகளை விரும்பும் சமூகம்

   வழிகேடுகளை விரும்பும்
                   சமுதாயம்
    
         ♦♦♦♦♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI
            கட்டுரை எண் 1426
                      14-11-2021
                         *******
அரும்பு மீசை முளைக்காத சிறுவனின் உணர்வுகளை கூட தோண்டி எடுக்கும் அளவு ஆபாச காட்சிகளும் சமூகவலைதளத்தில் குடும்ப பெண்களின் குத்தாட்ட காட்சிகளும் அருவெறுப்பான செய்முறைகளும் எடுத்து கூறவே தயங்கும் கீழ்நடை பேச்சுக்களும் விபச்சார அழைப்புகளும் கட்டுப்பாடுகளே இல்லாது  பெருகி விட்ட நிலையில் 

பாலியல் கொடுமைகளை  பற்றி மட்டும் பேசி கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியமாகும்

ஆசிரியர் மாணவியிடம் தவறாக பேசுவதும் நடப்பதும்
மாணவர்கள் ஆசிரியைகளிடம் தவறாக நடப்பதும்
கிழவன் சிறுமியை கற்பழிப்பதும் ஆச்சரியமான விசயம் அல்ல 

குறிப்பாக மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்களும் வருந்துவது போல் பேட்டி தருவது யாவும் ஏமாற்று வேலையாகும் 

அரசாங்கம் நினைத்தால் எந்த தீங்கையும் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த இயலும் 

ஒரே இரவில் செல்லாத நோட்டுக்களை அறிவித்த அரசுக்கு சமூக வளைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ஆபாச தளங்களை தடை செய்வது  சிரமமான காரியம் அல்ல 

ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்ய நினைப்பது இல்லை

காரணம் அவர்களும் மறைமுக விபச்சாரத்திற்கு அடிமைகளாகவே இருக்கின்றனர்

சர்வ சாதாரணமாக முகநூல் போன்ற வலைதளங்களில் விபச்சாரத்தின் அழைப்பு  எளிதாகி விட்டது 


ஆன்லைன் படிப்பு என்ற பெயரில் கட்டுப்பாடான குடும்பங்களில் கூட இன்று மாணவ மாணவியர்கள் வழிகேடுகளின் பக்கம் அலை போல் அடித்து செல்லப்படுகிறார்கள் 


படிப்பை விட ஒழுக்கமே முக்கியம் என்ற பண்பாடை மறந்து விட்டு படிப்பே முதலிடம் என்ற கல்வி போதையை திணித்து விட்டனர்

என் மகன் நல்லவன்
என் மகள் நல்லவள்
என்று குருட்டுத்தனமான நம்பிக்கை வைக்கும் பெற்றோர்கள் நிச்சயம் அவர்களாலே கண்ணீர் சிந்தியுள்ளனர் இனியும் சிந்துவார்கள் 

படிப்புக்கு மட்டுமே முக்கியதுவம் தந்து ஆண் பெண் இயல்பை புரிய மறுக்கும் கோ எஜிகேஷன் என்ற மேல் நாட்டு வழிமுறை  நிச்சயம் ஒழுங்கீனத்தை  புற்றீசல் போல் பரவிடவே செய்யும் 

இறையச்சமுடையவர்களே தடுமாறும் காலத்தில் இறையச்சம் அறவே இல்லாத ஜென்மங்களும் சினிமா மோகத்தால் சீரழியும் அறிவிலிகளும் நிச்சயம் திருந்தப்போவது இல்லை 


திறமையை வெளிக்காட்டி பிறரை ஈர்க்க வேண்டிய பெண்கள் தங்கள் மேனியை பல மாடல்களில் அழகு படுத்தி பிறரை வழிகெடுப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்

திரையில் புகைப்படங்களில்  பல மேக்கப்புகளை செய்து ஜொலிக்கும் பெண்களும்  தனிமையில் பிற மனிதர்களை போல் அனைத்து விதமான பலவீனங்களை நாற்றங்களை உடலில் பெற்றவர்கள் என்பதை புத்திசாலி புரிந்து கொள்வான்  

இதில் வேதனை என்னவெனில் விபரீதம் ஏற்படும் போது  மாத்திரம்  இவ்விசயத்தில் ஆடவர்களை மட்டுமே ஒட்டு மொத்தமாக குற்றவாளிகளாக்கி பெண்களை அப்பாவிகளை போல் சித்தரிப்பது கபட நாடகமாகும் 

        நட்புடன்  J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்