நீதி அநீதி
அநீதவான்களுக்கு எச்சரிக்கை ***************** ஏழ்மை அனாதை கோழை அந்நியன் பணியாளன் வெளியூர்க்காரன் என்பதற்காக எவருடைய விவகாரங்களில் தலையிடும் போது நீதி அநீதியாக மாறுகிறதோ பேச்சு வார்த்தைகள் கண்ணியம் இழக்கிறதோ அவர்களே மறுமை நாளில் கடும் தண்டனை பெறுபவர்களில் முதன்மையானவர்கள் குறிப்பாக குர்ஆன் சுன்னாவை மட்டும் அடிப்படையாக ஏற்றவர்கள் நீதியில் தடுமாறும் போது அவர்களுக்கான தண்டனை இரட்டிப்பாக்கப்படுகிறது குடும்பத்திற்காக பதவிக்காக பணத்திற்காக இயக்கத்திற்காக நட்புக்காக புறகாரணங்களுக்காக நீதியின் முதுகெழும்பை முறிப்பவர்கள் மறுமையில் நாதியற்றவர்களாய் தலைகுனியும் நிலையை நிச்சயம் சந்திப்பார்கள் அவர்களின் தொழுகையோ தானதர்மங்களோ இதர பணிகளோ அநீதியை நிலைநாட்டியதற்கு துணையாக வராது தொழாமல் தண்டனையை அனுபவிப்பவனை விட நல்லொழுக்கம் பேணாதவன் தண்டனையை அனுபவிப்பதை விட அவைகளை பேணுபவன் திரட்டிய நன்மைகளை நாசமாக்குவதே அறிவீனத்தின் உச்சம் காலை...