Posts

Showing posts from April, 2026

பாதை மாறும் முஸ்லிம் இளம்பெண்கள்

          முஸ்லிம் பெண்களின்            தற்போதைய அவலம்                 *********************               கட்டுரை எண் 1576                     ****************** கடந்த காலத்தை விட தற்போதைய முஸ்லிம் பெண்களிடத்தில் இஸ்லாமிய உணர்வும் பகுத்துணர்வும் மேலோங்கி உள்ளது  என்று பெருமைப்பட பேசினாலும்  சினிமா போதை மற்றும் ஒழுக்கச்சீரழிவுகளில் இருந்து  முஸ்லிம் பெண்கள் கனிசமாக  மீளவில்லை என்பதையே   அன்றாட நிகழ்வுகள் செய்திகள்  பறை சாற்றுகிறது  என் கணவரை விட  இந்த நடிகனையே எனக்குப்பிடிக்கும் என் பிள்ளைகளை விட  இந்த நடிகனையே எனக்கு பிடிக்கும் என்று பகிரங்கமாக பேட்டி கொடுக்கும் அளவு  குடும்ப பெண்களின் சினிமா மோகம்  அவர்களின் அறிவை முடமாக்கியுள்ளது   என் வீட்டுக்காரரை விட  விஜய் என்ற நடிகனையே  எனக்கு பிடிக்கும் என்று பகிரங்கமாக  ஒழுக்கம் கெட்...

சவுதி இளவரசர் சல்மான்

   வழிகேடுகளின் வாசல் திறக்கும்                    சவுதி இளவரசரும்  திசைமாற்றும் அழைப்பாளர்களும்               **************************                கட்டுரை எண் 1575                    **************** வழிகேடுகளின் பிறப்பிடமாக திகழ்ந்த அரபுலகத்தை செவ்வைப்படுத்தி  அறியாமையில்  ஊறிப்போன மக்களை சீர்படுத்தி  அழகிய கட்டுப்பாடுகளை விதித்து  நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுத்து  அரபுலகை இஸ்லாமிய நாடாக உருவாக்கியதில் இறைத்தூதர் நபி  (ஸல்) அவர்களின் ஒப்பற்ற தியாகமும் நபித்தோழர்களின் தியாகங்களுமே  முதன்மையானது  உலகமே அரபுநாடுகளை போன்ற (குர்ஆனிய) அரசியல் சட்டங்களே மனித வாழ்வுக்கு ஏற்றது என்று அவர்களையும் அறியாது  ஒப்புக்கொண்டு வரும் இச்சூழலில் பரம்பரை ரீதியாக அரபுலகில்  ஆட்சிக்கு வந்த சிலர்களால் அரபுலகத்தின் புனிதத்துவம் சிதிலமடைந்து வருகிறது  அந்த கலக்கத்தை...

சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்திக்க மறந்த பிரபஞ்சம்

       சிந்திக்க தெரிந்த மனிதன்        சிந்திக்க மறந்த பிரபஞ்சம்                   ********************                      கட்டுரை 1573                          ************ ஒருவன் கவர்சிகரமான  புத்தாடையை அணிந்து வருவதை கண்டால் அதை தயாரித்த நிறுவனத்தை ஆச்சரியத்துடன்  விசாரிக்கும் மனிதன்  தரம் வாய்ந்த வாகனத்தை கண்டால்  அதை தயாரித்த நிறுவனத்தை  விசாரிக்கும் மனிதன் எழில் மிகு வர்ணப்பூச்சை  சுவற்றில் கண்டால் அதை தீட்டியவனை விசாரிக்கும் மனிதன்  எவ்வித முன்னுதாரமும் இன்றி எவ்வித குறைபாடும் இன்றி  நெடுங்காலமாக செயல்பட்டு வரும் வானத்தை படைத்தவன் யார் ? பூமியை படைத்தவன் யார் ? பூஞ்சோளையை படைத்தவன் யார் ? வனவிலங்குகளை படைத்தவன் யார்  ? உயர்ந்த மலைகளை படைத்தவன் யார் ? கவர்சி மிகுந்த பறவைகளை படைத்தவன் யார் ? ஜொலிக்கும் சூரியனை படைத்து யார் ? ஆற்றல் மி...

யாருக்கு ஓட்டு 2026

                 யாருக்கு ஓட்டு                       ************** யாரை ஓட்டு போட வேண்டும் என்பதை விட  யாரை ஆட்சியில் அமர வைக்க  என் ஓட்டு அமைந்து  விடக்கூடாது  என்று சிந்திப்பதே அரசியல்  ஒரு முறை இவருக்கு  வாக்களித்து பார்ப்போம் ஒரு முறை அவருக்கு  வாக்களித்து பார்ப்போம் என்ற சிந்தனையே  உனது வாக்கு   நீ விரும்பாத ஒருவனுக்கு சாதகமாகவும்  உன் சமூகத்திற்கே பாதகமாகவும் அமையக்கூடும் ஒரு முறை வாக்கு செலுத்தி பார்ப்போம்  என்று  நீ கருதும் எந்த அரசியல்வாதியும்  தனித்து நின்று அதிகாரத்தை பெற முடியாது என்பதே எழுதப்படாத விதி ஆளுமையில் இருக்கும்  பெரிய கட்சியும்  ஆளுமை  செய்த பெரிய கட்சியும் கூட்டணி வைக்காது வெற்றி பெற்றது இல்லை  என்ற அடிப்படை புரிதல் உன்னிடம் இல்லையெனில் நீ அரசியல் ஞான சூனியம் முடிவே உன் கண் முன் தெரியும் பட்சத்தில்  அதற்கு மாற்றமாக  நீ வாக்களித்தால்  அது உனக்கு நீ செய்யும...

வரம்பு மீறும் ஜமாத்துகள் கணவர்கள்

      மார்க்க வரம்புகளை மீறும் ஜமாத் நிர்வாகிகள் கணவர்கள்               *************************                 கட்டுரை எண் 1572                     ***************** வாழ்வில் உடன்படாத தம்பதியர்களை  பல முறை குடும்பத்தார்களே சமரசம் பேசி இணைத்து வைத்த பிறகும்  மனம் வெறுத்து  தலாக் அல்லது குலா தலாக்கை இருவரில் ஒருவர்  முறையிடும் பொழுது அதை ஏற்று அவர்களின் மனஉளைச்சலுக்கு மார்க்கப்படி தீர்வுக்கு வழிவகை செய்து  தரவேண்டிய ஜமாத் நிர்வாகிகளே  நாட்களை இழுத்தடிப்பது கடுமையான குற்றமாகும் இஸ்லாத்தில் திருமணம்  என்பது இரு குடும்பத்தார் முன்னிலையில்  ஆண் பெண் இருவரும் செய்து கொள்ளும்  ஒப்பந்தமாகும் ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றும் வரையே அவர்களிடையே திருமண  பந்தம் தொடரும் ஒப்பந்தத்தை ஒருவர் ...