யாருக்கு ஓட்டு 2026
யாருக்கு ஓட்டு
**************
யாரை ஓட்டு போட வேண்டும் என்பதை விட
யாரை ஆட்சியில் அமர வைக்க
என் ஓட்டு அமைந்து விடக்கூடாது என்று சிந்திப்பதே அரசியல்
ஒரு முறை இவருக்கு
வாக்களித்து பார்ப்போம்
ஒரு முறை அவருக்கு
வாக்களித்து பார்ப்போம்
என்ற சிந்தனையே
உனது வாக்கு
நீ விரும்பாத ஒருவனுக்கு சாதகமாகவும்
உன் சமூகத்திற்கே பாதகமாகவும் அமையக்கூடும்
ஒரு முறை வாக்கு செலுத்தி பார்ப்போம் என்று
நீ கருதும் எந்த அரசியல்வாதியும்
தனித்து நின்று அதிகாரத்தை பெற முடியாது என்பதே எழுதப்படாத விதி
ஆளுமையில் இருக்கும்
பெரிய கட்சியும்
ஆளுமை செய்த பெரிய கட்சியும்
கூட்டணி வைக்காது வெற்றி பெற்றது இல்லை
என்ற அடிப்படை புரிதல்
உன்னிடம் இல்லையெனில்
நீ அரசியல் ஞான சூனியம்
முடிவே உன் கண் முன் தெரியும் பட்சத்தில்
அதற்கு மாற்றமாக
நீ வாக்களித்தால்
அது உனக்கு நீ செய்யும் துரோகம் மட்டும் அல்ல
மாறாக உன் சமூகத்திற்கே
நீ செய்யும் கேடு
எந்த அரசியல்வாதியை
நீ உத்தமன் என்று புகழ்ந்தாலும்
அந்த அரசியல்வாதியும்
தமிழகத்தில் பீஜேபி காலூன்ற
ஏதோ ஒரு வகையில்
பகடையாய் செயல்பட்டவன் என்பது
புத்திசாலிக்கு தெரியும்
உன்னை ஒரு அரசியல்வாதி
பிரம்பால் அடிக்க முன் வருகிறான்
உன்னை ஒரு அரசியல்வாதி
செருப்பால் அடிக்க முன் வருகிறான்
அடி வாங்குவதோ உன் தலைவிதி
அந்த அடியை செருப்பால் வாங்க வேண்டும் என்று
நீயே முடிவு செய்தால்
அது உன் செயல் விதி
எதுவாகினும்
நீ தேர்வு செய்யும் அரசியல்வாதி
உன்னை விட
உத்தமனும் அல்ல
உன்ன விட
ஒழுக்கம் பேணுபவனும் அல்ல
ஒரு தொகுதிக்கு அவன் செய்யும்
செலவுகளை வைத்து
உனது சந்ததியே பல ஆண்டு
நிம்மதியாய் அமர்ந்து சாப்பிடலாம்
அந்தளவுக்கு அரசியல்வாதி
பொருளியல் தன்னிறைவு பெற்றவன்
அவனது சொத்துக்களின்
லாக்கர் சாவிகளைக்கூட
பழைய பொருளாக ஆக்கருக்கு எடைப்போட்டு
நீ செல்வந்தனாக மாற முடியும்
அந்தளவுக்கு நீ வறியவன்
அவனோ உனக்கு முரண்பட்ட
பெரியவன்
இந்தியன் என்பதை
நிலை நாட்டவும்
இயன்றளவு தீங்குகளை தடுக்கவுமே வாக்குரிமையை பயன்படுத்துகிறோமே தவிர
இவரை தேர்வு செய்தால்
நாட்டையே செழிப்பாக்கி விடுவார்
அவரை தேர்வு செய்தால்
நாட்டையே தலை நிமிர்த்தி விடுவார்
என்பதற்காக அல்ல
காரணம்
அதிகாரத்தை தேடும் எவனும்
இறைக்கட்டளையை நிலைநாட்ட
முன் வருவது இல்லை
மாறாக அதிகார போதையில்
புகழ்தேடியே வலம் வருகிறான்
வாக்கு வாங்க
ஒரு தொகுதிக்கு அவன் செய்யும்
செலவுகளே ஒரு கிராமத்தை தத்தெடுக்க பயன்படும்
அதை அறிந்த அவனும்
கிராமத்தை தத்தெடுக்க மாட்டான்
மாறாக நமக்கு வாக்குகளிக்க மாட்டான்
என்று தெரிந்தவனுக்கும் லஞ்சமாகவே
அதை கொடுப்பதில் ஆனந்தம் அடைவான்
அரசியல்வாதியை
வரம்பு மீறி துதி பாட
நீ கட்சிக்காரனும் இல்லை
அரசியல்வாதியை இகழ்ந்துரைக்க
நீ அடியாளும் இல்லை
மூளையை அடகு வைத்துள்ள
மூடனும் இல்லை
முஸ்லிம் சமூகம்
உரிமைகளை இழக்கவும்
மத உரிமைகளை பறிக்கவும்
சிறைச்சாலைகளை நிரப்பவும்
போராட்டங்களில் அணி வகுக்கவும்
அந்நியர்களாக சித்தரிக்கவும்
தேச விரோதிகளாக மாற்றவும்
வந்தேரிகளாக முடக்கவும்
எவனுடைய அதிகாரம் ?
எவனுடைய ஆதரவு ?
எவனுடைய மவுனம் ?
எவனுடைய ஒத்துழைப்பு ?
எவனுடைய பேச்சு ?
அதிகமாக பயன்பட்டது
என்பதை மட்டும்
உற்று நோக்கிப்பார்
அவனே
நீ வாக்களிக்க தகுதியற்றவன்
நீ யாருக்கு வாக்களிப்பாய்
என்ற உனது கேள்விக்கு
நான் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்
என்பது என் பதில் அல்ல
நான் நல்லவனுக்கே வாக்களிப்பேன்
என்பதும்
என் பதில் அல்ல
தனித்து நிற்பவனுக்கே வாக்களிப்பேன்
என்பதும்
என் பதில் அல்ல
மாறாக
தற்போதைய சூழலில்
மதவாத பீஜேபி ஆளுமைக்கு எதிரானவனுக்கே
நான் வாக்களிப்பேன்
வாக்களிக்க வேண்டும்
என்பதே என் பதில்
முஸ்லிம்கள் திமுகவுக்கு
அடிமைகள் அல்ல
மாறாக திமுக பரம்பரையே
முஸ்லிம்களின்
வாக்குகளுக்கு அடிமை
இது திமுகவுக்கும் தெரியும்
அரசியல் ஞானமுடையவர்களுக்கும்
தெளிவாகவே புரியும்
அதனால் தான் அவர்களது
ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெளிப்படையான
வன்மம் தற்போது இல்லை
அந்த வன்மம் கடந்த காலத்தில்
லேசாக தென்பட்டதால் தான்
முஸ்லிம்களின் வாக்கும்
அதிமுகவின் பக்கம் சரிந்தது
இது அவர்களுக்கும் புரிந்தது
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
9-4-2026
Comments
Post a Comment