பாதை மாறும் முஸ்லிம் இளம்பெண்கள்

          முஸ்லிம் பெண்களின்
           தற்போதைய அவலம்
                *********************
              கட்டுரை எண் 1576
                    ******************

கடந்த காலத்தை விட தற்போதைய முஸ்லிம் பெண்களிடத்தில் இஸ்லாமிய உணர்வும் பகுத்துணர்வும் மேலோங்கி உள்ளது 
என்று பெருமைப்பட பேசினாலும் 

சினிமா போதை மற்றும்
ஒழுக்கச்சீரழிவுகளில் இருந்து  முஸ்லிம் பெண்கள் கனிசமாக  மீளவில்லை என்பதையே  
அன்றாட நிகழ்வுகள் செய்திகள் 
பறை சாற்றுகிறது 

என் கணவரை விட 
இந்த நடிகனையே எனக்குப்பிடிக்கும்
என் பிள்ளைகளை விட 
இந்த நடிகனையே எனக்கு பிடிக்கும் என்று பகிரங்கமாக பேட்டி கொடுக்கும் அளவு 
குடும்ப பெண்களின் சினிமா மோகம் 
அவர்களின் அறிவை முடமாக்கியுள்ளது  

என் வீட்டுக்காரரை விட 
விஜய் என்ற நடிகனையே  எனக்கு பிடிக்கும் என்று பகிரங்கமாக  ஒழுக்கம் கெட்டு பேட்டி கொடுத்துள்ள  குடும்ப பெண்ணையும் 
சமீபத்தில் காண முடிந்தது 

ஆனால்  அந்த விஜய் என்ற நடிகனின்  மனைவியே 
தன் வீட்டுக்காரன் ஒழுக்கம் கெட்டவன் அவனுடன் வாழ  பிடிக்கவில்லை என்று  விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்ற எதார்த்த  உண்மையைக்கூட அப்பெண்  உணரவில்லை 



இது போன்ற தரம் கெட்ட 
பேட்டியை கூட  ரசிக்கும் அளவு கணவன்மார்களின் அறிவீனமும் பொட்டைத்தனமும்  நிறைந்துள்ளது 

இல்லங்களில் இருந்தே அந்நியர்கள் ரசிக்கும் விதமாக  அலங்கோலமாக சினிமா கூத்தாடிகளின் அருவெறுப்பான பாடல்களுக்கு 
அங்க அசைவுகளை வெளிப்படுத்தி  ரீல்சுகளை வெளியிடும் அளவுக்கு  இளம்பெண்களின் தராதரம் மட்டமாகிட்டது 

மார்க்கக் கட்டுப்பாடுகளை பின்பற்றும் 
குடும்ப பெண் என் மகனுக்கு  மனைவியாக  அமைவாளா என்ற அச்சத்துடன் திருமணத்திற்கு  பெண் தேடும் அச்சம்  அதிகரித்து விட்டது 

கல்லூரியில் படிக்க வைக்க அனுப்பி வைப்பதை விட கடந்த காலத்தை போல் பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்றளவுக்கு பெற்றோர்களின் இதயத்தில்  கலக்கம் தாக்கி விட்டது 

நாணம் கொள்வதில் 
பெண்களை விட ஆண்களே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று இயற்கைக்கு முரணாக பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவர்களையே  சிந்திக்க வைக்கிறது 


இவைகளின் பின்னனியில் பெற்றோர்களின் குருட்டு நம்பிக்கையும் மார்க்கத்தின் மீது வைக்க வேண்டிய பற்றின்மை குறைபாடுமே  
முதன்மை காரணம் 


கடந்த காலத்தில் மஃரிப் நேரத்தில்  திருமறைக்குர்ஆனை விரித்து வைத்து 
ஓதிய இஸ்லாமிய இல்லங்களை இன்று  காணுவது அரிதாகிப்போனது  

சீரியல்களும் சினிமாக்களும் பிக்பாஸ் போன்ற கேடுகெட்ட நிகழ்சிகளுமே இஸ்லாமிய இல்லங்களை திரையரங்குகளாக மாற்றி விட்டது 

நபித்தோழியர்களின் 
வீர வரலாறு
ஒழுக்க வரலாறு 
ஆன்மீகப்பற்று 
நபிநேசம் போன்றவை 
இன்றைய இஸ்லாமிய இளம்பெண்களிடத்தில் 
மாயமாய் போனது 


மார்க்கத்தை முறையாக படித்த  
ஊருக்கு ஒரு ஆலீமா என்ற நிலை கூட இல்லாது மாவட்டத்துக்கு ஒரு ஆலீமா என்ற நிலையே  காணப்படுகிறது 


மார்க்க உணர்வை ஊட்ட 
தன் அருகில் இருக்கும் இல்லத்தை நோக்கி நடக்காத கால்கள் 
பெயரளவுக்கு ஹிஜாபை அணிந்து கொண்டு  கூத்தாடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் 
ஓட்டு பொறுக்கும் அவலத்தை முஸ்லிம் பெண்களில் காண முடிகிறது 

பெண்களை அதிகமாக நரகத்தில் கண்டேன் என்ற நபிமொழிக்கு ஏற்று இக்கால இஸ்லாமிய பெண்கள் வாழ்கிறார்களோ 
என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 


உலக முஸ்லிம்களுக்கே முன்னுதாரணமாக 
மர்யம் (அலை) அவர்களையும் பிர்அவ்னின் மனைவி ஆசியா ( ரலி ) அவர்களையும்  குறிப்பிடும் குர்ஆனை நம்பியுள்ள 
முஸ்லிம் குடும்ப  பெண்கள் 

தனது பிளைகளுக்கும் குடும்பத்திற்கும் கூட முன்னுதாரணமாக விளங்கவில்லை என்பதே வேதனை தரும் விடயமாக உள்ளது

மார்க்கக்கட்டுப்பாடுகளை கண்ணியமாக 
கருத வேண்டிய முஸ்லிம் பெண்கள் 
அழகிய கட்டுப்பாடுகளை அடிமைத்தனம் போல் கருதிக்கொண்டு சம உரிமை என்ற போலித்தனமான சாக்கடையில் மிதக்கும் 
மாதர் சங்கங்களின் அங்கத்தினர்களை போலவே 
சமூகத்தில் வலம் வரும் நிலை அதிகரித்துள்ளது 

இப்பதிவு ஆண்களை உத்தமர்களாக 
சித்தரிக்கும் பதிவு அல்ல
மாறாக ஆடவர்களை விட சீரழிவில் அதிவிரைவில் முஸ்லிம்  பெண்கள் முந்திக்கொண்டுள்ளனர் என்பதற்கான எச்சரிக்கைப்பதிவே


       
وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏

(நபியே! மர்யமிடத்தில்) 
மலக்குகள்
மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் உன்னை  தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்
இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உன்னை  தேர்ந்தெடுத்திருக்கின்றான்

(அல்குர்ஆன் : 3:42)


وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏


மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்
அவர் “இறைவா! 
எனக்காக உன்னிடத்தில் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! 
இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்

(அல்குர்ஆன் : 66:11)

   நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                        15-4-2026



Comments

Popular posts from this blog

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்

மனித உறுப்பு