சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்திக்க மறந்த பிரபஞ்சம்

       சிந்திக்க தெரிந்த மனிதன்
       சிந்திக்க மறந்த பிரபஞ்சம்
                  ********************
                     கட்டுரை 1573
                         ************

ஒருவன் கவர்சிகரமான  புத்தாடையை அணிந்து வருவதை கண்டால் அதை தயாரித்த நிறுவனத்தை ஆச்சரியத்துடன் 
விசாரிக்கும் மனிதன் 

தரம் வாய்ந்த வாகனத்தை கண்டால் 
அதை தயாரித்த நிறுவனத்தை 
விசாரிக்கும் மனிதன்

எழில் மிகு வர்ணப்பூச்சை 
சுவற்றில் கண்டால் அதை தீட்டியவனை விசாரிக்கும் மனிதன் 

எவ்வித முன்னுதாரமும் இன்றி
எவ்வித குறைபாடும் இன்றி 
நெடுங்காலமாக செயல்பட்டு வரும்

வானத்தை படைத்தவன் யார் ?
பூமியை படைத்தவன் யார் ?
பூஞ்சோளையை படைத்தவன் யார் ?
வனவிலங்குகளை படைத்தவன் யார்  ?
உயர்ந்த மலைகளை படைத்தவன்
யார் ?
கவர்சி மிகுந்த பறவைகளை படைத்தவன் யார் ?
ஜொலிக்கும் சூரியனை படைத்து யார் ?
ஆற்றல் மிகு மனிதனை படைத்தது யார்  ?

என்ற கேள்வியை கேட்பதும் இல்லை 
அதை பற்றி நொடி பொழுதும்  
சிந்திப்பதும் இல்லை 

கண்களால் காண முடியாத நிரல்கள் ( சாப்ட்வேர்கள் ) பின்னனியில்  ஒருவனின் ஆற்றல் இருப்பதை   ஆணித்தரமாக நம்பும் மனிதன் 
மேற்கூறப்பட்டதை போன்று ஆயிரமாயிரம் அதிசயங்களை  பிரபஞ்சத்தில் கண்டும்  படைத்திருப்பவனை பற்றி சிந்திக்காது இருப்பதும் அல்லது குருட்டுத்தனமாக  படைப்பாளனை மறுப்பதும் அறிவீனத்தின் உச்சம் 

மறைந்திருப்பதை கண்டுபிடிப்பதை தவிர மனிதனால் எதையும் படைக்கவும் இயலாது 
முற்றிலும் அழிக்கவும் இயலாது என்பதே அறிவியல் தரும் உச்சகட்ட  பாடம் 

இதை அறிவுப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் முழு சுதந்திரத்துடனும்  மனித சமுதாயத்திற்கு பாடம் நடத்தும் வாழ்வியல்  மார்க்கமே இஸ்லாம் 

இஸ்லாத்தை கற்றுத்தந்த இறைத்தூதர் 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 
இவைகள் தனது ஆற்றலால் உருவாக்கியவை என்று கடவுள் தன்மைக்கு உரிமை கொண்டாடவில்லை 

அவரை இறைத்தூதராக நம்பும் முஸ்லிம் சமூகமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை 
கடவுளாக அல்லது கடவுளின் குமாரனாக பூஜிக்கவும் இல்லை 
வரம்பு மீறி துதிப்பதும் இல்லை 

இறைவனின் தூதராக நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் இருப்பினும் இறைவனின் அம்சத்தில் கடுகளவு தன்மையும் எவருக்கும் இல்லை அவருக்கும் இல்லை என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் அடிப்படை கோட்பாடு 


اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அனைத்து புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் ( இறைவன் ) அல்லாஹ்வுக்கே ஆகும்

(அல்குர்ஆன் : 1:2)


اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏

நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்
இரவும் பகலும் தொடர்ந்து 
ஏற்படுவதிலும் மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு 
கடலில் செல்லும் கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்
அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும்
காற்றுகளை தொடர்ந்து  வீசச் செய்வதிலும் வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும்  சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) 
சான்றுகள் உள்ளன

(அல்குர்ஆன் : 2:164)


     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           10-4-2026



Comments

Popular posts from this blog

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்

மனித உறுப்பு