உயர்சாதி

உயர்சாதி மேல்சாதி
               ******************

பார்த்தால் தீட்டு
தொட்டால் தீட்டு
பட்டால் தீட்டு 
என்று பிற மனிதனை கீழ்சாதியாக கருதும் எவனும் 

             !! தீட்டு பார்க்காத ஒன்று பணம் !!

பிச்சைக்காரன் தொட்டு கொடுத்த பணத்தையும்
கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி 
தொட்டு கொடுத்த பணத்தையும் 
நாவிதன் சிரைத்து உழைத்து 
தொட்டு கொடுத்த பணத்தையும்
எவ்வித பாகுபாடும் இல்லாது 
பூஜை அறையில் புனிதமாக பாதுகாப்பாக  வைப்பான் 

உயர்சாதிக்காரன் என்று தன்னை நினைப்பவனை விட உலகில்
உயர்ந்து  இருப்பது தொழிலாளியால் 
 அச்சடிக்கப்பட்ட பணமே

பிறக்கும் நேரம்
பணத்துடன் எவனும் 
பிறப்பது இல்லை

இறக்கும் நேரம்
பணத்தை எவனும்  உடன் எடுத்துச்செல்வதும் இல்லை 

செத்தப்பிணமாக மாறும்
எந்த பிணத்தையும் வேறுபடுத்தி ஆகாயத்தில் மிதக்க வைப்பதும் இல்லை 
பிறகோள்களில்  விஷேசமாக அடக்கப்படுவதும் இல்லை


மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் மனிதர்களில்

மனிதநேயத்துடன் எவன் நடக்கிறானோ 
அவனே உயர்சாதி

பண்பாடுகளில் எவன் 
சிறந்து விளங்குகிறானோ
அவனே உயர்சாதி

ஒழுக்கத்தில் எவன் பிரகாசிக்கிறானோ 
அவனே உயர்சாதி

இறையச்சத்தில் எவன் மிளிர்கிறோனோ 
அவனே இவர்கள் யாவரையும் விட மேல்சாதி


يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! 
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

 (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர்கள்
 நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்
(அல்குர்ஆன் : 49:13)


    நட்புடன் . J . யாஸீன் இம்தாதி
                      ஆக்கம்
          20-10-2023--10:00 AM

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்