கொள்கை தடுமாற்றம் ஏன்
கொள்கை தடுமாற்ற பின்னனி
♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1433
30-01--2022
*******
ஒரு காலத்தில் சத்தியத்தை நிலை நாட்ட கடுமையாக தன்னை தியாகம் செய்த சிலர் திடீரென பிற மக்களே வேதனை படும் விதம் அவரே அதுவரை எதிர்த்த கொள்கையை நோக்கி பயணிப்பதின் காரணம் என்ன
பணமே என்பது அவரது தடுமாற்றத்திற்கு பிறர் கற்பிக்கும் பொதுவான குற்றச்சாட்டு
இது பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாமே தவிர இதுவே மூல காரணம் என்று அனைவருக்கும் சொல்லி விட முடியாது
யாருடன் இணைந்து கொள்கை முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்தாரோ
அவர்களில் சிலர் இவரது வாழ்கை முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்திருக்க கூடும்
சத்தியத்திற்கு குரல் கொடுப்பதுடன் இவர்களுடன் இணைந்திருந்தால் வாழ்கையின் சிக்கல்களுக்கு கைகொடுப்பார்கள் என்ற அபரிதமான எண்ணம் அவரது வாழ்வில் நிறைவேறாதும் இருந்திருக்க கூடும்
சத்தியத்திற்கு குரல் கொடுத்தாலும் சத்திய அணியில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளுக்கு அவசியமற்ற பதிலை கூற கூடிய நிர்பந்தத்திற்கு இவரே ஆளாக நேரிட இருந்திருக்க கூடும்
இதில் எதுவாக இருந்தாலும் கொள்கையில் இருந்து தடுமாறுவது என்பது
அவரே கொள்கையின் உறுதியை சரியாக வளர்த்தி கொள்ளவில்லை என்பதை தான் பறைசாற்றுகிறது
எந்த கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு சென்றாலும் அந்த கொள்கைக்கு சொந்தம் கொண்டாடும் இயக்கத்திலும் அதன் பொருப்புகளிலும் மனம் விரும்பாத பல செயல்கள் இருக்கவே செய்யும்
அவைகளை உதறி தள்ளி விட்டு சகித்து கொண்டு கடந்து விட வேண்டுமே தவிர
இதற்காக அப்பழுக்கு படியாத ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்று விரும்பினால் கியாமத் நாள் வரை பல பிரிவுகளின் பக்கம் போய் கொண்டே இருக்கும் சூழல் தான் ஏற்படும்
இது தான் உலக வாழ்கை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment