வாழ்த்து நாடகம்

            வாழ்த்து நாடகமும்
                 உண்மையும்

                 ♦♦♦♦♦
       J . YASEEN IMTHADHI
            கட்டுரை எண் 1431
                      02-01-2022
                         *******

சுதந்திர தின வாழ்த்து
ஆசிரியர் தின வாழ்த்து
உழைப்பாளர் தின வாழ்த்து
திருமண தின வாழ்த்து
பிறந்த தின வாழ்த்து

இப்படி வருடம் முழுவதும் வாழ்த்துக்களுக்கு பஞ்சம் இல்லை

நூறாண்டு காலம் வாழ்க என்று பல காலமாக திருமணத்தில் அனைத்து சமூகமும் வாழ்த்திக் கொண்டு தான் உள்ளனர்

ஆனால் வாழ்தியது போல்  நூறாண்டு காலம் வாழ்ந்தோர்  எத்தனை என்பதே கேள்வி குறிதான்   ?

உலக மரபில் வாழ்த்து என்பதே ஒரு சடங்கு தான்

வாழ்துபவருக்கும் அதில் ஈடுபாடு இல்லை
வாழ்த்து பெறுவோருக்கும்  அதில் ஈடுபாடு இல்லை

நூறாண்டு காலம் வாழ வாழ்த்து பெறப்பட்ட மணமகன் நாற்பது வயதில் மரணித்து விட்டால் நூறாண்டு காலம் வாழ்த்தினீர்களே
ஆனால் என் மகன்  அவ்வாறு வாழாது அர்ப்ப வயதில் மரணித்து விட்டானே  என்று யாரும் வாழ்த்து வழங்கியவரை நோக்கி  சண்டைக்கு வரப்போவது இல்லை

நூறாண்டு காலம் வாழ்த்து பெறாத காரணத்தால் எவரது திருமணமும் இதுவரை தடை ஏற்பட்டதும் இல்லை

இங்கு வாழ்த்து பெறப்பட்டவன் வாழ்கையும் நாசமாகியுள்ளது
வாழ்த்து பெறாதவன் வாழ்கையும் நன்றாக இருந்துள்ளது

எவ்வகை  வாழ்த்துக்களும் இவ்வாறு தான் இருக்கும்

இறைவனை தொடர்பு படுத்தாது போற்றப்படும் எந்த வாழ்த்தும் வீணாணதே
நாத்தீகமானதே

காரணம் வாழ்த்து என்பதே
ஓர் பிராத்தணை தான்

இறைவனை புறம் தள்ளி விட்டு மனிதன் தனது நாவில் மாத்திரம் வாழ்த்திட இங்கு எவரும் பிறருக்கு ஆசி வழங்கும் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல

அவ்வகை வாழ்த்துக்களுக்கு இஸ்லாத்திலும்  வழிகாட்டப்படவில்லை

சிலர் மார்க்க உணர்வுடன் பிற கலாச்சாரத்தை எதிர்ப்பது போல்

உலக பார்வையில் சிலர் போலியான மதசடங்கான  வாழ்த்துக்களை  ஆதரிக்கின்றனர்

இதில் பயன் ஏதும் இல்லை

வாழ்த்து என்றால் நாம் அடையாத ஒன்றை பிறர் அடையும் போது அவரது மனம் குளிர சொல்லப்படும் வார்த்தைகள் தான் வாழ்த்து என்பது

புத்தாண்டு என்பது அப்படிப்பட்டதும் அல்ல

மனிதன் ஆடு மாடு அனைத்தும் அடையும் ஒன்று தான் புத்தாண்டு என்பது

மார்க்கத்தை முற்றிலும் புறம் தள்ளி விட்டு பிறர் போலவே உலகில் தன்னை காட்டி கொள்ளும் வேடதாரிகளும்

பிற சமூகம் அவர்களின் திருநாளை கொண்டாடும் போதெல்லாம் சூழலை புரியாது அவர்களுக்கு ஹலால் ஹராம் சட்டம் பேசுபவனும் மார்க்கத்தை அறியாத அஞ்ஞானிகளே

வாழ்நாளில் ஒரு நிமிடம்
நம்மை விட்டு கடந்து போனாலும்
நமக்கான மரண நேரம்
மிக நெருக்கமாகி வருகிறது என்பது மட்டும் தான் உண்மை

மரணத்தை சந்தித்து மடமை செயல்களை புறம் தள்ளுவோம்
                    **********

யார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி)
நூல் : அபூதாவூது (3515)

        நட்புடன்   J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்