உறக்கத்தை தொலைத்த கண்கள்
உறக்கம் தொலைத்த
கண்கள்
♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1432
23-01-2022
*******
தூக்கமே மனித ஆரோக்யத்தின் முக்கியமான பாலம்
தூக்கமின்மையே பல உடலியல் உலவியல் நோய்களின் தாயகம்
ஒரு நாளில் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம் என்கிறது மருத்துவம்
தூக்கம் வரும் போது தூங்குவது என்பது தற்காலத்தில் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத சூழ்நிலையாக மாறி விட்டது
ஆனால் தூங்க வேண்டிய நேரம் வாய்ப்பாக அமையும் போது அதை வீணாக கழிப்பது என்பது தான் அறிவீனம்
ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்குதல் என்பது இரவு நேரத்தில் அமைத்து கொள்வது தான் மிகவும் சிறப்பானது
காரணம் இருள் நிலவும் சந்திர நேரத்தில் கண்கள் உறங்கும் நிலையில் தான் மெலடோனின் என்ற ஹார்மோனை உடல் சுரக்கிறது
இந்த ஹார்மோனை பகல் நேர தூக்கத்தில் எவராலும் பெற இயலாது
இயற்கையான தூக்க சுழற்சியை ஒழுங்காக அமைப்பதற்காக உடலின் சர்க்காடியன் இசைவைச் (Circadian rhythm) சீராக்க இது தான் உதவுகிறது. மெலடோனின் மூளையில் உள்ள பினியல் சுரப்பியின் சுரப்பு ஆகும்
இயற்கை அமைப்பில் அனைத்து உயிர்களும் ( விதிவிலக்காக சில பிராணிகளை தவிர) இருள் நேரத்தில் வீணாக விழித்து கொண்டிருப்பது இல்லை
உலகில் மின் விளக்கு தோன்றி இரவையும் பகலாக ஜொலிக்க வைக்கும் அளவு முன்னேற்றம் வந்த பின்பு
குறிப்பாக ஆன்லைன் மலிவாகி விட்ட இக்காலத்தில்
மனிதர்கள் தூங்க வேண்டிய இரவு நேரத்தை பாழ்படுத்தி கண்ணுக்கு செய்ய வேண்டிய கடமையை மறந்து வீணாக்கி கொண்டுள்ளனர்
இரவு நேரத்தில் கண்விழித்து அறிக்கை போடுவதால் லைக் சேர் செய்வதால் எந்த விதமான நன்மையும் மனித சமூகத்திற்கு ஏற்பட போவது இல்லை
وَمِنْ اٰيٰتِهٖ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
(அல்குர்ஆன் : 30:23)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment