நபிமார்களுக்கும் அனுமதி இல்லை
நபிமார்களுக்கே அனுமதி இல்லை
********************
கட்டுரை எண் 1537
************
இஸ்லாத்தின் கொள்கைகள்
சட்டங்கள் விதிவிலக்குகள் யாவுக்கும்
உரிமை வழங்கப்பட்டவர்
மாமனிதர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே
சீர்திருத்தம் எனும் பெயரால்
நன்மை என்ற பெயரால்
நபிகளார் காட்டிய வழிமுறைகளுக்கு மாற்றமாகவும் எதிராகவும் முரணாகவும் செயல்படும் அதிகாரம் எவருக்கும் இல்லை
அவர் மகானாக இருப்பினும்
ஆய்வு நிறைந்த இமாமாக இருப்பினும்
அதிகாரமுடைய ஆட்சியாளனாக இருப்பினும் புகழ்மிக்க தலைவனாக இருப்பினும்
இஸ்லாத்தை நிலைநாட்ட உயிரை திறக்க தயாராக இருக்கும் தியாகியாக இருப்பினும்
வேறு எவராக இருப்பினும் சரியே
மார்க்கத்தின் அடிப்படையை தெளிவாக புரிந்து கொண்ட மக்களுக்கு இதை விட அழுத்தமாக கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
ஆனாலும்
பித்அத்துகள் சமூகத்தில் ஊறிப்போனதாலும் பித்அத்துகளை கண்டிக்க கடமைப்பட்ட
மார்க்க அறிஞர்களே பித்அத்துகளுக்கு
ஊக்கம் தருவதாலும் ஆதரித்து பேசுவதாலும்
இதை விட அழுத்தமாக எச்சரிப்பதாக இருந்தால்
இறைனால் நேரடியாக அனைத்தையும் கற்றுக்கொடுக்கப்பட்ட
நபி ஆதம் (அலை) அவர்களாக இருப்பினும்
இறைவனிடம் நேரடியாக பேசிய
மூஸா (அலை) அவர்களாக இருப்பினும்
இறைனால் பல அற்புதங்கள் வழங்கப்பட்ட
நபி ஈசா (அலை) அவர்களாக இருப்பினும்
ஏகத்துவத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும்
நபி இப்ராஹீம் (அலை) அவர்களாக இருப்பினும்
இறுதித்தூதராக போற்றப்படும்
நபி முஹம்மத் (ஸல) அவர்களாக இருப்பினும்
இறைவனால் மேன்மையாக்கப்பட்ட
இதர நபிமார்களாக இருப்பினும் சரியே
மார்க்கம் எனும் பெயரில் இறைவன் புறத்தில் இருந்து கட்டளை வராது சுயமாக மக்களுக்கு சட்டங்கள் கூறவும் இயற்றவும் எந்த அதிகாரமும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை
நபிமார்களே இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ கடமைப்பட்டவர்களே
இறைவனால் வழங்கப்பட்ட தூதுச்செய்திகளை
எத்தி வைப்பது மட்டுமே நபிமார்களின்
அடிப்படைப் பணி
தூதுச்செய்தியை எத்தி வைக்கும் பணியை நபிமார்கள் செய்யாவிட்டால் அவர்களும் கூட
நபி என்ற உயரிய அந்தஸ்த்தை இழப்பதுடன்
இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டிருப்பார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளது திருமறைக்குர்ஆன்
இந்தளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படையை
எச்சரித்த பின்னும் ஒரு முஸ்லிம் தன் நிலையை மாற்றிக்கொள்ளா விடில் அவனது ஈமானே சந்தேகத்திற்குரியது
வாயில் வெளிப்படும் ஈமான் அவனது
இதயத்தில் ஒட்டவில்லை என்பதே உண்மை
اِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ
(தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பதே உன் மீது கடமையாகும்
(அல்குர்ஆன் : 42:48)
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ
தூதரே! உன் இறைவனிடமிருந்து உன் மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்
(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்
(அல்குர்ஆன் : 5:67)
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல்
இது ஹலாலானது இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்
நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 16:116)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
4-11-2024
Comments
Post a Comment