அபூஜஹ்லா உமர் ரலியா

          நீங்கள் சிந்தனையில் 
       அபூஜஹ்ல் பரம்பரையா
        உமர் ( ரலி ) பரம்பரையா 
                *****************

ஊட்டப்பட்ட நம்பிக்கையில் ஊறிப்போனவனும் 
திணிக்கப்பட்ட வெறுப்பில் சிக்கியவனும்
எந்நிலையிலும் சிந்தனைக்கு 
முதலிடம் கொடுக்க மாட்டான் 
அவன் படித்து பட்டம் 
வாங்கியவனாகினும் சரி 
பல தடைகளை கிழித்து 
சாதனைகளை 
செய்தவனாக இருப்பினும் சரி 


முஸ்லிம் சமூகத்திலும் பித்அத்துகள் 
மார்க்கத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட மடமைத்தனமான செயல்கள்  
பீடித்திருப்பதற்கு மூல காரணமும் இதுவே


அல்லாஹ் ரசூல் சொன்ன சொல்லை 
கண்களால் கண்டும் அதற்கு முக்கியத்துவம் தராது 
அதற்கு மாற்றமான அல்லது எதிரான காரியங்களுக்கு வலைந்து நெளிந்து செல்வதும் இதனால் மட்டுமே 


ஒரு சாரார் மீது கொண்ட வெறுப்பு
தனிமனிதனின் மீதுள்ள வெறுப்பு
ஒரு அமைப்பின் மீதுள்ள வெறுப்பு
இதற்கு விதையாகவே பயன்படும் 


மனசாட்சிக்கு எதிராக செயல்படுகிறோம் என்பதை அறிந்தும் ஆதாரங்களுக்கு மாற்றமாக செயல்படுகிறோம் என்பதை தெரிந்தும் 
தன்னைசீர்த்திருத்தி கொள்ளாதவனை 
நபிமார்களே நேரடியாக சந்தித்து விளக்கம் கொடுத்தாலும் அதையும் எளிதாக  
உதாசீதனம் செய்வார்கள்




அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
குர்ஆன் சுன்னா ஆதாரங்களுக்கு 
அடிபணிந்து செல்லுங்கள்


இறைவன் அறியாமையில் செய்த தவறுகளை மன்னிப்பானே தவிர
அறிந்து செய்யும் வரம்பு மீறல்களை 
வீம்புகளை  மன்னிக்க மாட்டான் 
 
அபூஜஹ்ல்
உத்பா
உமைய்யா
ஷைபா 
நம்ரூத் 
பிர்அவ்ன் 
போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை இறைவன் அறிவிலிகளாக படைக்கவில்லை
மாறாக அவர்களே தங்கள் அறிவுக்கும் 
மார்க்கத்தின் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் தராது அகங்காரம் உடையவர்களாக 
தங்களை வார்த்துக்கொண்டனர் 


நான் அபூஜஹ்ல் வழியில் சிந்தனையை அடகு வைத்த பரம்பரையா ? அல்லது சிந்தனைக்கு முக்கியத்துவம் தந்த உமர் (ரலி) அவர்கள் பரம்பரையா என்பதை நீங்களே உங்களை எடை போட்டு கொள்ளுங்கள் 



يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌  اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

முஃமின்களே! 
நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்
எந்த ஒரு கூட்டத்தார் மீதும் 
நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு 
நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்
நீதியை நிலைநாட்டுங்கள் 
இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு 
மிக நெருக்கமாகும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 5:8)


     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           16-9-2024



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்