மீலாதும் மவ்லிதும்
மீலாதும் மவ்லீதும்
வலுவிழப்பது யாரால்
31 :10:2020 கட்டுரை எண் 1384
<><><><><><><><><><>
J . Yaseen iMthadhi
•••••••••••
பல்லாயிரக்கணக்கில் இறைவன் நபிமார்களை சங்கிலி தொடராக அனுப்பி இருந்தும்
அவர்களில் ஒருவருக்கும் மீலாது விழாவை எடுக்காது அவர்கள் பெயரால் மவ்லீது பாடல்களை பாடாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் மீலாது விழாவை கொண்டாடுவதின் காரணம் என்ன
நபிமார்களுக்கு மத்தியில் கூட பிறப்பில் பாரபட்சமா ?
என்ற கேள்வியை எழுப்பினாலும் சரி
சஹாபாக்கள் ஏன் மீலாது விழாவை கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினாலும் சரி
மத்ஹபுகளில் கூட ஏன் மீலாது விழாவை பற்றி கருத்து சொல்லப்படவில்லை என்று கேள்வியை எழுப்பினாலும் சரி
மீலாது விழாவுக்கு முட்டு கொடுக்கும் இமாம்களின் ஒரே பதில் ஏன் நபிகளாரை புகழ கூடாதா ?
சஹாபாக்கள் நபிகளாரை புகழவில்லையா என்று மட்டுமே எதிர் கேள்வியை பாமரர்களிடம் எழுப்பி விட்டு பின்வாங்கி விடுவார்கள்
சரி சஹாபாக்கள் நபிகளாரை எப்படி புகழ்ந்தார்களோ அது தான் இந்த சுபுஹான மவ்லிதா அது தான் தற்போதைய மீலாது விழா என்று சொல்ல வருகிறீர்களா என்று அவர்கள் கோணத்தில் நின்று மறு கேள்வி கேட்டால்
நாங்கள் அப்படி தான் புகழுவோம் என்பது தான் இவைகளுக்கு முட்டு கொடுக்கும் இமாம்களின் இறுதிகட்ட பதில்
இவ்வாறு பொருத்தமற்ற பதில் கூறுவதால் தான் மவ்லீது பாடலை பல காலம் பக்தியோடு பாடி வந்தவர்கள் மீலாது விழாவை மார்க்கமாக கருதியவர்கள் அவைகளை விட்டு ஒதுங்கி விட்டார்கள் ஒதுங்கி கொண்டுள்ளார்கள் என்ற சாதாரண ஒரு புரிதலும் கூட இல்லாதவர்களாக ஆலிம்கள் மாறி விட்டனர்
மவ்லீதுக்கும் மீலாது விழாவுக்கும் எதிராக பேச கூடியவர்களின் பேச்சுக்களை கேட்டு எழுத்துக்களை படித்து மனம்மாறியவர்களை விட அவைகளுக்கு சாதகமாக பேசும் இமாம்களின் பேச்சுக்களை பொருத்தமற்ற ஆதாரங்களை கண்கூடாக பார்த்த பிறகு மனமாறியவர்களே முஸ்லிம் சமூகத்தில் மிகவும் அதிகம்
குர்ஆன் ஹதீஸ் என்ற இரு அடிப்படையை தாண்டி எந்த ஒன்றுக்கும் எவராலும் பொருத்தமான நியாயமான பதில்களையும் மார்க்க ஆதாரங்களை கூறவே இயலாது என்ற உண்மை தான் அன்றாடம் வெளிப்பட்டு வருகிறது
كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான் அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்
(அல்குர்ஆன் : 3:86)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment