சுபுஹான மவ்லூத்
ஜமாஅத்துல் உலமா
மவ்லூத்களை மொழிபெயர்த்து வெளியிடுமா
25 :10:2020 கட்டுரை எண் 1382
<><><><><><><><><><>
J . Yaseen iMthadhi
•••••••••••
அந்நிய பாஷையில் எழுதப்பட்ட மவ்லூத் எனும் அரபு கவிதை பாடல்களை பற்றி மறுப்புகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவும் சூழலில்
மனித கற்பனையில் தோன்றிய அந்த புத்தகத்திற்கு மார்க்க போர்வையில் முட்டு கொடுப்பவர்கள் மவ்லூத் பாடல்கள் முழுவதையும் மக்கள் நேரடியாக படித்து புரியும் விதம் தமிழ் மொழியில் வரிக்கு வரி மொழி பெயர்த்து கொடுத்தாலே மார்க்க உணர்வுள்ள மக்கள் மவ்லூத்களை இறைமறை திருக்குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஒப்பிட்டு சரியானதை விளங்கி கொள்வார்கள்
மவ்லூதுகளுக்கு வக்காலத்து வாங்கி பேசும் ஜமாஅத்துல் உலமா அறிஞர்கள் பல ஆண்டுகளாக இதற்கு முழுமையாக தங்களை தயாராக்கி கொள்ளவில்லை
காரணம் மவ்லூத் வரிகளை தமிழ் மொழியில் பொருள் படுத்தி வெளியிட்டால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திணறி விடுவோம் என்ற அச்சமே காரணம்
முப்பது வருடங்களாக மவ்லூதின் சில வரிகளை மாத்திரம் எடுத்து கூறி நபிகள் நாயகத்தை புகழ்வது தப்பா ?
சஹாபாக்கள் நபிகளாரை புகழவில்லையா என்று விதண்டாவாதம் செய்து மக்களை சிந்திக்க விடாது தடுப்பதையும் தடையாக இருப்பதையும் காண முடிகிறது
மக்கள் புரிந்த மொழியில் மவ்லூத் வரிகளை அதன் ஹிகாயத்துகளை ( கதைகளை ) நேரடியாக மொழி பெயர்த்து வெளியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவித்த மக்களே மவ்லூத் கிதாபுகளை புனிதம் என்று நினைத்து பல காலத்தை இவர்களை நம்பி வீணடித்து விட்டோம் என்று உணர்ந்து வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு அவர்களே மவ்லூத்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்
சுபுஹான மவ்லூத் என்ற அரபு பாடலை யார் எழுதியது என்பதை கூட இதுவரை ஒருவரும் தெளிவாக சொன்னது இல்லை
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِىْ لَهٗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதையை (இயற்ற)க் கற்றுக் கொடுக்கவுமில்லை அது அவருக்கு அவசியமானதுமல்ல இது நல்லுபதேசமும் தெளிவான குர் ஆனுமே தவிர (வேறு) இல்லை
(அல்குர்ஆன் : 36:69)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment