தராவீஹ்
( தராவீஹ் தொழுகை )
இரவு தொழுகை
செய்தியும் சிந்தனையும்
****************
கட்டுரை எண் 1406
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
எடுத்து வைக்கும் வாதங்களுக்கு யார் முறையான ஆதாரங்களை சமர்பிக்கவில்லையோ
அதை ஒட்டி எழுப்பப்படும் எதிர் கேள்விகளுக்கு யார் தெளிவான மறுப்பை தரவில்லையோ
அவர்கள் நாடறிந்த அறிஞர்களாக வல்லுனர்களாக இருந்தாலும் அவர்களின் கூற்று முற்றிலும் மார்க்க பார்வையில் தவறானதே
இதுவும் சரி அதுவும் சரி
என்பதற்கு சில விதிவிலக்கை தவிர வேறு எதற்கும் இஸ்லாத்தில் இரு பதில்கள் இல்லை
இதுவே சரி என்பதே இஸ்லாத்தின் ஆணி வேர் தனித்துவம்
ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் நடைமுறை படுத்திய சுன்னத்தான ( இரவு) தொழுகையின் எண்ணிக்கை
எட்டு ரக்அத்துகளா ?
இருபது ரக்அத்துகளா ?
என்று கேட்டால் அதற்கு ஒரு பதில் தான் கூறப்பட வேண்டும்
விரும்பியவர் தொழுகலாம் விரும்பாதோர் விட்டு விடலாம்
நபிலாக நினைத்து தொழுகலாம்
நன்மையை நாடி தொழுகலாம்
என்று ஒருவர் பதில் கூறினால் அவர் சுயகருத்தை திணிக்க முற்படுகின்றாரே தவிர
மார்க்கத்தை நிலை நாட்ட முற்படவில்லை
******************
குறிப்பு தகவல்
1-இருபது ரக்அத் தொழுகையை அங்கீகரிக்கும் இமாம்கள் கூட நபியவர்கள் அவ்வாறு தொழுதார்கள் என்று வாதிக்கவில்லை மாறாக உமர் (ரலி) அவர்கள் நடைமுறை படுத்தியதாகவே கூறுகின்றனர்
2 -உமர் (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும் ரமலான் அல்லாத மாதத்திலும் எட்டு ரக்அத் தான் தொழுதார்கள் என்பதை அறிந்தும் அதற்கு மாற்றமாக இருபது ரக்அத் என்ற பித்அத்தை நடை முறை படுத்தினார்கள் என்று நம்புவது உமர் ( ரலி ) அவர்களை மதிக்கும் செயல் அல்ல
3- உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்று தான் செய்திகள் இடம் பெற்றுள்ளதே தவிர உமர்( ரலி) அவர்கள் தொழுதார்கள் என்றோ அல்லது தொழ வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர் என்றோ எதிர் தரப்பினர் எடுத்து வைக்கும் ஆதாரத்தில் செய்திகள் இல்லை
4- மாறாக உமர் ( ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் எட்டு ரக்அத்களை தொழ வைக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று தான் ஆதாரப்பூர்வமான தகவல் இடம் பெற்றுள்ளது
5- இது யாவற்றுக்கும் மேல் தராவீஹ் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை கற்று கொடுத்ததாக எந்த ஹதீசும் இல்லை
قال العلامة الطُريحي : فإن صلاة التراويح صلاة غير مشروعة و هي بدعة لا يجوز إقامتها لأنها ليست من سُنة النبي ( صلى الله عليه و آله ) و ما أمر الله بها في القرآن الكريم
தராவீஹ் என்ற பெயரில் உள்ள தொழுகை மார்க்கத்தில் இல்லாதது
அதை தொழுவது பித்அத் ஆகும் காரணம் நபி (ஸல்) அவர்கள் சுன்னத்தில் இல்லை
குர்ஆனிலும் அல்லாஹ் கட்டளையிடவில்லை
இமாம் :அல்லாமா துரைஹி
நூல் :மஜ்மஉல் பஹ்ரைன் 4
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment