கிரகண தொழுகையும் ஜமாத்துகளின் நிலையும்

           கிரகண தொழுகையும்

   ஜமாத் நிர்வாகிகளின் நிலையும்
                   ***************      
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
                     ***********
            J . Yaseen iMthadhi
             கட்டுரை எண் 1307
                       **********
சுன்னத் பர்ளுகளை ஊக்க படுத்தவும் அதை கூட்டு முறையில் நடைமுறை படுத்தவும் பயன்படுத்த வேண்டிய இடமே இறையில்லங்கள்
அதை செயல்முறை படுத்த வேண்டிய நபர்களே பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்கள்

மவ்லூத் குத்பிய்யத் மீலாது விழா நேர்ச்சை  போன்ற பித்அத்துகளை அரங்கேற்ற முன்னிலை வகிக்கும் பள்ளி நிர்வாகமும் இமாம்களும்  ஹதீஸ் நூல்களில் பல நூற்றாண்டாக ஆதாரப்பூர்வமாக பதிவாக்கப்பட்ட கிரகண தொழுகையை நடைமுறை படுத்துவதற்கு ஆர்வம் குன்றியவர்களாக அதை பற்றி  ஆலோசிக்காதவர்களாக இன்றும் அநேகர்  உள்ளனர்

26-12-19 சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் மற்றும் வழிபாட்டுதலங்களில் மத ரீதியான  சடங்குகள் கடை பிடிக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டுதலம் மாத்திரமே பெரும்பாலும் வழிபாடு இல்லாது அனாதையாக காட்சி அளித்துள்ளது

கிரகண தொழுகை உண்டா ? அதை எந்த முறையில் தொழ வேண்டும் ? என்று விந்தையாக கேட்கும் அளவு முஸ்லிம் சமூகம் இருப்பதற்கு இவர்கள் தான்  காரணம்

அரிதாக நடைபெறும் சூரிய சந்திர கிரகண தொழுகையை ஜமாத்தோடு தொழுவதற்கு அந்தந்த பள்ளிவாசல் உறுப்பினர்கள் தான் ஜமாத் நிர்வாகிகளை இனிமேலாவது  கண்டித்து  உந்துதல் தர வேண்டும்

மார்க்கத்தில் இல்லாத பித்அத்துகளை சுன்னத்து போல் அரங்கேற்றும் நிர்வாகிகளை புறம் தள்ளிவிட்டு சுன்னத்துகளை வரவேற்கும் நபர்களை பள்ளியின் பொருப்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும்

                        ********
1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது
உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள்
நாங்களும் நுழைந்தோம்

கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்

பிறகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை

எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்
அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

       நூல் --ஸஹீஹ் புகாரி

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்