நபிகளாருக்கும் அனுமதி இல்லை
நபிகளாருக்கும் அனுமதி இல்லை
******************
கட்டுரை எண் 1502
*************
மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்படும் காரியங்களுக்கு ஆதாரங்களை சமர்பிக்காதவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களை விட பாவிகளாக மாறி வருவதை யோசிப்பது இல்லை
காரணம் இஸ்லாத்தை ஏற்காதவன் இஸ்லாத்தின் மீது இட்டுக்கட்டி சொல்லுவது இல்லை
முஸ்லிம் போர்வையில் இருப்பவர்களே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத
பல விசயங்களை புனிதமாக சித்தரிக்கின்றனர்
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களும் கூட
இறைவன் சொல்லாத விசயங்களை நன்மையாக சமூகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்படவில்லை
என்ற அடிப்படை கல்வியை உணராதவர்கள் பித்அத்துகளில் இருந்து எக்காலமும் மீள இயலாது
இது நன்மை தானே
இது நல்லது தானே
இது சிறந்தது தானே
இது முன்னோர் சொன்னது தானே
இது நெடுங்காலம் இருந்தது தானே
என்ற வெற்று வாதங்கள் அனைத்தும் இறைவனின் பார்வையில் குப்பைக்கு சமானமே
மறுமை நன்மையை எதிர்பார்த்து செய்யப்படும் காரியங்களில்
நல்லது எது ?
கெட்டது எது ?
என்று சுயஅறிவை கொண்டே தீர்மானிக்க முடியும் என்றால்
வேதங்கள் எதற்கு ?
இறைத்தூதர்கள் எதற்கு ?
இதை உணர மார்க்க ஆய்வாளராக
நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
அடிப்படை அறிவுள்ளவர்களாக
இருந்தாலே போதுமானது
நபி (ஸல்) அவர்கள் இறைவன் பெயரால் இட்டுக்கட்டினால் கூட அவரது நாடி நரம்பை துண்டித்து விடுவேன் என்று இறைவன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் அல்குர்ஆன் வசனங்கள்
உங்கள் உள்ளத்தை நடுங்க செய்யவில்லையா?
இது நாள் வரை செய்து வரும் பித்அத்துகளை நினைத்து உங்களை வருந்தச்செய்யவில்லையா ?
திருமறை குர்ஆன் மொழிபெயர்பை
கையில் வைத்துக்கொண்டு ஒரு முறைகூட
அந்த வசனங்களை படிக்காத ஒருவன்
கண்ணிருந்தும் குருடன்
செவியிருந்தும் செவிடன்
நீ குருடனா செவிடனா
என்பதை கீழ் பதிக்கப்பட்ட அல்குர்ஆன் வசனங்களை படித்து நீயே முடிவு செய்து கொள்
உன்னை சுவன வாசலுக்கு இழுத்துச்செல்வது
என் வேலை அல்ல
நரக வாசலின் தீய பாதைகளை எச்சரிக்கை செய்வதே
எனது பணி
இதை நீ ஏற்றுக்கொண்டாலும்
மறுத்தாலும் மறுமையில் இதன் மூலம்
நிச்சயம் இறைவன் எனக்கு பரிசளிப்பான்
இன்ஷா அல்லாஹ்
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால்
لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(அல்குர்ஆன் :
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ
உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
(அல்குர்ஆன் : 69:44,45,46,47,48)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment