இஸ்லாமிய குற்றவியல் சட்டம்

     இஸ்லாமிய குற்றவியல் சட்டமும்
        அறிவிலிகளின் விமர்சனமும்
                 **********************
                  கட்டுரை எண் 1519
                       ************

அபிராமி போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகள் கடும் தண்டனை தீர்ப்பு வழங்கும் போது அரபுநாடுகளில் தரும் தண்டனைகள் போல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நியாயமாக குரல் கொடுக்க கூடியவர்கள் 
இஸ்லாமிய தண்டனையை விவரிக்கும் போது காட்டுமிராண்டி சட்டம் என்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்டம் என்றும் முரண்பட்டு கூச்சலிடுவதை காண முடிகின்றது 


அரபுநாடுகளில் தரப்படும் தண்டனை சட்டம் பெரும்பாலும் இஸ்லாம் கூறும் சட்டம் என்பதை உணராது விமர்சிக்கிறார்களா ?
அல்லது குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக்கூடாது என்று சிந்திக்காது விமர்சிக்கிறார்களா ? என்ற சந்தேகம் அநேகருக்கு உள்ளது 

ஒரு மனிதன் எந்த குற்றத்தை செய்கிறானோ 
அந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடம் இல்லாது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளியால்  பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று
அவர்கள் விரும்பினால் குற்றவாளிக்கு மன்னிப்பையும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் வழங்கும் அல்லது நஷ்டஈடை பெற்றுத்தரும் 
அல்லது மன்னிப்பை வழங்கும் 

இதில் கொந்தளித்து பேசுவோர் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியில் விமர்சிக்கிறார்களே தவிர அவர்களின் விமர்சனத்தில் கடுகளவும் நியாயம் இல்லை 

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் சிறைச்சாலைகளுக்கு இடம் இல்லை

குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதின் மூலம் மக்களின் வரிப்பணத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை
மக்கள் வரிப்பணத்தில் குற்றவாளிகளுக்கு அன்றாடம்  தண்டச் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை 

இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதை இஸ்லாம் முழுமையாக 
தடை செய்கிறது 

சிறைச்சாலைகளுக்கு செய்யப்படும் கோடிக்கணக்கான செலவுகள் இதனால் தடுத்து நிறுத்தப்படுகிறது 

குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதின் மூலம் குற்றவாளியால் பாதிக்கப்பட்ட மனிதன் உணர்ச்சிவசப்பட்டு தவறான பாதையை தேர்வு செய்து அவனும குற்றவாளியாக மாறுவதை  தடுத்து நிறுத்தி விடுகிறது 

குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள்
பல ஆண்டுகள் சிறைச்சாலையில் மனஉளைச்சலில் சிக்கித்தவிப்பதையும் தடுத்துநிறுத்தி விடுகிறது 


கண்ணுக்கு கண்
காதுக்கு காது
உயிருக்கு உயிர்

என்ற இஸ்லாமிய குற்றவியல் சட்டம் குற்றவாளிகளை தண்டிக்கவும் நாட்டுமக்களை பாதுகாக்கவுமே தவிர அப்பாவிகளை தண்டிப்பதற்கு அல்ல என்பதை நியாயவான்கள் அறிந்து கொள்ள வேண்டும்

وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏

நல்லறிவாளர்களே! 
குற்றவாளிகளை தண்டிப்பதில் 
உங்கள் உயிருக்கு உத்திரவாதம்  உண்டு 

இறையச்சமுடையவராக நீங்கள் மாறலாம் 

(அல்குர்ஆன் : 2:179)



     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          30-7-2025


Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்